சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் புதிய படம் விக்ரம். இதில் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு தொடங்கி, தற்போது நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பகத் பாசில் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
இந்நிலையில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், கமலுக்கு மகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காளிதாஸ் பாவக்கதைகள் படத்தில், தங்கம் என்ற திருநங்கை வேடத்தில் நடித்ததன் மூலம் பாராட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மிரட்டும் ‘பிசாசு 2’ - வனப்பகுதிக்குள் மிஷ்கின்!