ETV Bharat / sitara

மகளிர் குழு தலைவி ஆன ஓவியா - சற்குணம்

களவாணி -2 படத்தில் ஓவியா மகளிர் குழு தலைவியாக நடித்திருப்பதாக இயக்குநர் சற்குணம் தெரிவித்தார்.

ஓவியா
author img

By

Published : Jul 3, 2019, 7:17 PM IST

இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் களவாணி. காதல், நகைச்சுவையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனைத் தொடர்ந்து ஒன்பது வருடங்கள் கழித்து களவாணி 2 படத்தை இயக்குநர் சற்குணம் இயக்கியுள்ளார். இப்படத்தில், விமல், ஓவியா, சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் பணிகள் நிறைவடைந்து படம் வெளிவர தயாராக இருக்கிறது.

இயக்குநர் சற்குணம்

இந்நிலையில் களவாணி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள பிரசாத் லேபில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ஓவியா, சரண்யா பொன்வண்ணன், இளவரசு ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவின்போது, நடிகை ஓவியா பேசுகையில், '10 ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த முகங்களை இங்கு பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. களவாணி 2 படத்தில் அனைவரும் ஒரு குடும்ப உறுப்பினர்கள் போல் படத்தில் பணியாற்றியுள்ளோம்" என்று தெரிவித்தார்.

நடிகர் இளவரசு

இதன்பின்னர் இயக்குனர் சற்குணம் பேசுகையில், "நடிகர் விமல் கேரளாவில் ஒரு படப்பிடிப்பில் உள்ளதால் அவரால் வர முடியவில்லை. களவாணி படத்தில் ஓவியா பள்ளி மாணவியாக இருந்தார். இந்த படத்தில் மகளிர் குழு தலைவியாக உள்ளார். களவாணி 2 படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது இளவரசு, சரண்யா பொன்வண்ணன் ஆகிய இருவரும்தான். அவர்களின் நடிப்பு கண்டிப்பாக பேசும்படியாக இருக்கும்" என்றார்.

நடிகை சரண்யா பொன்வண்ணன்

Intro:களவாணி 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புBody:கடந்த 2010-ம் ஆண்டு இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் விமல் ஓவியா நடித்து வெளிவந்த படம் களவாணி. காதல் மற்றும் நகைச்சுவையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது களவாணி 2 படத்தை இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் விமல் ஓவியா சரண்யா பொன்வண்ணன் இளவரசு உள்ளிட்டோர் நடிப்பில் தற்போது திரைக்கு வர தயாராக உள்ளது.

நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் உள்ள பிரசாத் லேபில் இன்று பிற்பகல் நடைபெற்றது இந்த விழாவில் நடிகை ஓவியா சரண்யா பொன்வண்ணன் இளவரசு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நடிகை ஓவியா பேசுகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த முகங்களை இங்கு பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி எனது முதல் படம் களவாணி இயக்குனர் சற்குணம் தான் ஓவியா என்று பெயர் வைத்தார் களவாணி 2 படத்தில் அனைவரும் ஒரு குடும்ப உறுப்பினர்கள் போல் படத்தில் பணியாற்றி உள்ளோம் இதை படம் பார்க்கும் போதே அது படத்தில் தெரியும் இந்த படத்தில் அரசியல் மற்றும் ரொமான்ஸ் உள்ளது எனக்கும் விமலுக்கும் உள்ள ரொமான்ஸ் விட இளவரசு சரண்யா பொன்வண்ணனுக்கு இடையேயான ரொமான்ஸ் ரொம்ப நல்லா இருக்கும் விமல் இன்றைக்கு வரவில்லை அவர்தான் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார் அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர் களவாணி 2 படத்தில் மீண்டும் என்னை அழைத்ததற்கு சற்குணம் அவர்களுக்கு நன்றி களவாணி படத்தில் நானும் நடித்துள்ள அதற்கு மிகவும் மகிழ்ச்சி.

இயக்குனர் சற்குணம் பேசுகையில்,

நடிகர் விமல் கேரளாவில் ஒரு படப்பிடிப்பில் உள்ளதால் இன்று அவரால் வர முடியவில்லை இந்த படத்தில் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இருந்த விமல் போன்று வித்தியாசம் தெரியாமல் இந்த படத்தில் ஒன்றி நடித்துள்ளார் களவாணி படத்தில் ஓவியா பள்ளி மாணவியாக இருந்தார் இந்த படத்தில் மகளிர் குழு தலைவியாக உள்ளார். களவாணி 2 படத்தில் நடிக்க அழைத்ததும் நடிகை ஓவியா எதுவும் கூறாமல் உடனடியாக ஒப்புக் கொண்டார் அதற்கு அவருக்கு நன்றி

Conclusion:களவாணி 2 படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது இளவரசு மற்றும் சரண்யா பொன்வண்ணன் அவர்கள்தான் அவர்களின் நடிப்பு கண்டிப்பாக பேசும்படியாக இருக்கும்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.