ஒருவன் ஏன் கலைஞனாக மாறுகிறான்?,அதை மாறுதல் என்று கூறுவதா?,அல்லது பரிணாமம் என்று கூறுவதா? ஒரு கலைஞன் வானத்தில் இருந்து பிறப்பதில்லை,ஒரு ரசிகனே கலைஞனாக பரிணாமம் அடைகிறான்.ஒரு கலைஞன் தன் படைப்பை சொந்தம் கொண்டாட முடியாது என்று ஓஷோ கூறுவார். அவன் படைத்ததும் அது உலகத்திற்கே சொந்தம் ஆகி விடுகிறது. கலையின் ஆட்கொள்ளலே கலைஞன் என்பது ஓஷோவின் கூற்று..!.
"கலைஞன் என்பவன் உலகிற்கே அர்பணிக்கவும், பரிசளிக்கவும் பிறந்தவன்.அவனை வேலை ஆளாக வைக்காமல் ,அவனுக்கு வேண்டிய உணவையும்,இடத்தையும் கொடுத்து அவனை பரிசளிக்க விட வேண்டும்" என்றும் ஓஷோ குறிப்பிட்டிருக்கிறார்.
போற போக்கில் ஒரு சினிமா ரசிகன் கூறிய வார்த்தை மிக ஆழமாக என்னை யோசிக்கச் செய்தது. அது," i love good films rather than a good film makers" இந்த வார்த்தையில் எவ்வளவு ஆழம் இருக்கிறது...!. இந்தப் பார்வையில் கலையை அணுக பெரிய பக்குவம் இருந்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.
நம் கோவில் சிற்பங்கள்,பல anonymous கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஓவியங்கள்,பல கலைகளின் தொடக்கத்திற்கு முன்னோடியாக இருந்தவர்கள். இப்போது பெயரில்லாத களைஞர்களாகவே நம்மிடம் நீடிக்கிறார்கள், ஆனால் அவர்களின் தாக்கம் இன்றும் நிலைக்கிறது.
அதனால் கலைஞனுக்கு அழிவு உண்டு ,அவனின் தாக்கத்திற்கு மட்டுமே அழிவில்லை ,அவனின் அழிவிற்கு பிறகு ,அது உருமாறி வேறு ஒருவனை ஆட்கொள்ளும்.அதன் விளைவே உலகளாவிய அளவில் உள்ள கலை படைப்புகள் .
இங்கு யாரும் கலையை படைப்பதில்லை . கலையே மனிதனை பரிணாமம் அடைய செய்கிறது,அதுவும் பரிணாமம் அடைகிறது,தன்னை தானே களை எடுக்கிறது ,தன்னை தானே அளிக்கவும் செய்கிறது .ஆகவே கலைஞனுக்கு அழிவுண்டு ,அவனின் தாக்கத்திற்கு மட்டுமே அழிவில்லை..!,அந்த தாக்கத்திற்கு பெயர் இல்லை,அடையாளம் இல்லை,அது ஒரு ’parasite’ போன்றது...! ஒரு கலைஞனின் அழிவே அந்த கலையின் அடுத்த பரிணாமத்தின் தொடக்கம்..!
இவண்:"அழியவிருக்கும் கலைஞன்"