தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவருக்கும் மும்பை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்சுலுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுவிட்டதாகவும், விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய திருமண தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,, ”எனக்கும் மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிச்சுலுக்கும் வரும் 30ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இந்தப் பெருந்தொற்று காலம் எங்கள் வாழ்க்கையில் ஒரு மெல்லிய ஒளியைப் பாய்ச்சியுள்ளது. நாங்கள் எங்கள் வாழ்க்கையை ஒன்றாகத் தொடங்கியுள்ளோம்.
- — Kajal Aggarwal (@MsKajalAggarwal) October 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) October 6, 2020
">— Kajal Aggarwal (@MsKajalAggarwal) October 6, 2020
இத்தனை ஆண்டுகளாக நீங்கள் என் மீது பொழிந்த அன்புக்கு மிகவும் நன்றி. இந்தப் புதிய பயணத்தைத் தொடங்கும் நாங்கள் உங்களுடைய ஆசிர்வாதங்களை எதிர்பார்க்கிறேம். உங்கள் முடிவில்லா ஆதரவுக்கு நன்றி'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மதுரையில் தொடங்கிய தனுஷின் பாலிவுட் பட ஷூட்டிங்!