பிரபல நடிகை காஜல் அகர்வால் மும்பை தொழிலதிபர் கவுதம் கிட்சலுவை 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் காஜல் அகர்வால் கர்ப்பம் அடைந்ததாகவும், இதனை அடுத்து அவர் ’இந்தியன் 2’ உள்பட ஒருசில படங்களில் இருந்து விலகி இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், காஜல் அகர்வாலின் கணவர் கவுதம் கிட்சலு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை உறுதி செய்யும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், காஜல் அகர்வாலின் புகைப்படத்தை பதிவு செய்து 2022ஆம் ஆண்டில் சந்திப்போம் எனக் குறிப்பிட்டு கர்ப்பமான பெண்மணியின் எமோஜி ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து காஜல் அகர்வால் கர்ப்பம் என்பதை அவரது கணவர் உறுதி செய்ததையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.