நானும் ரெளடிதான் படத்தை தொடர்ந்து தற்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்.
காமெடி கலந்த ரொமான்ஸ் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. இதைத்தொடர்ந்து அனிருத் இசையில் உருவான இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இப்படத்தின் விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தற்போது ரிலீஸ் பணிகள் நடைபெற்று வரும் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரையுலகில் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: ‘டிங் டாங்’ ஃபர்ஸ்ட் லுக்: பிரபுதேவா வெளியீடு