ETV Bharat / sitara

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' கதை திருட்டு - பாக்யராஜ் அதிரடி - பாக்யராஜ் கடிதம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஹீரோ' திரைப்படத்தின் கதைத் திருட்டு உண்மைதான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பாக்யராஜ் கூறியுள்ளார்.

k-bhagyaraj
k-bhagyaraj
author img

By

Published : Dec 24, 2019, 1:57 PM IST

சிவகார்த்திகேயன் நடிப்பில் 'இரும்புத்திரை' படத்தின் இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் 'ஹீரோ'. இந்தப்படத்தின் கதை உதவி இயக்குநர் போஸ்கோ பிரபு என்பவருடைய கதை என படத்தின் வெளியீட்டிற்கு முன்பே சர்ச்சை எழுந்தது.

தற்போது இந்த கதை பிரச்னை தொடர்பாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் போஸ்கோ பிரபுவுக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அந்தக் கடிதத்தில், பாக்யராஜ் மற்றும் எழுத்தாளர் சங்கத்தின் 18க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஹீரோ படத்தின் கதையையும் 2017ஆம் ஆண்டில் போஸ்கோ பிரபு பதிவு செய்து வைத்திருந்த கதையையும் ஆய்வு செய்ததில் இரண்டும் ஒரே கதைதான் என தெரியவந்ததாகவும் ஆனால் இந்த உண்மையை மித்ரன் ஏற்றுக்கொள்ள மறுத்து தன்னுடைய படத்தை வெளியிட்டு சங்கத்தை அவமதித்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

SIFWA
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் கடிதம்

'சர்கார்', 'கோமாளி' படங்களுக்கு இதேபோன்ற பிரச்னை வந்தபோது என்ன நியாயம் வழங்கப்பட்டதோ, அதையே இதிலும் தீர்ப்பாக வழங்க திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் இயக்குநர் மித்ரன் 20 நாட்களுக்கு மேலாகியும் அது குறித்து பதிலளிக்கவில்லை எனவும் கடிதத்தில் பாக்யராஜ் கூறியுள்ளார்.

SIFWA
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பாக்யராஜ்

மேலும் மித்ரனின் கதைத் திருட்டு குறித்த சாட்சிக் கடிதமாக சங்கத்தின் சார்பில் பாக்யராஜின் கடிதத்தை ஏற்றுக் கொள்ளுமாறு போஸ்கோ பிரபுவுக்கு வலியுறுத்தியுள்ள பாக்யராஜ், நீதிமன்றம் மூலம் நீதி கிடைக்க பிரபுவுக்கு வாழ்த்துகளையும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க...

பாலிவுட் குயின் கங்கனா நடிக்கும் 'பங்கா' - டிரெய்லர் வெளியீடு!

Intro:Body:

K bhagyaraj letter from SFA

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.