சமீபத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவரது அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஜீது ஜோசப் இயக்கத்தில் நடிகர் கார்த்தியுடன், அக்கா கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்து கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்துக்கு 'பொன்மகள் வந்தாள்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.
!['பொன்மகள் வந்தாள்' ஃபர்ஸ்ட் லுக்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/jyothika-new-movie-titled-as-ponmagal-vanthal3_1507newsroom_1563175230_183.jpg)
படத்தின் பெயரே பெரும் எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. 'சொர்கம்' படத்தில் சிவாஜி படத்தில் வரும் 'பொன்மகள் வந்தாள்' பாடல் தற்போது ஜோதிகா படத்தின் தலைப்பாக உருவெடுத்துள்ளது. படம் குறித்த முக்கிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.