ETV Bharat / sitara

இந்திய பெருங்கடலில் உருவாகிவரும் 'ஜூவாலை'

இயக்குநர் ரஹ்மான் ஜிப்ரீல் தானே இயக்கி நடித்துவரும் திரைப்படம் 'ஜூவாலை'. பெரும்பாலும் கடல் சார்ந்த பகுதிகளில் பெரும் பொருட்செலவில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை பற்றிய சிறு பார்வை.

author img

By

Published : Nov 5, 2019, 3:09 PM IST

juwalai-new-movie

தமிழ் சினிமாவில் 'நீர்ப்பறவை', 'மரியான்', 'கடல்' என சில படங்களே கடலில் படமாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மொத்தம் 75 விழுக்காடு இந்தியப் பெருங்கடலில் உள்ள சிறு சிறு தீவுகளில் 'ஜூவாலை' என்னும் திரைப்படம் உருவாகிவருகிறது.

இயக்குநர் பாலுமகேந்திரா, ஜோதி கிருஷ்ணா ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய ரஹ்மான் ஜிப்ரீல் இப்படத்தை இயக்கி அதில் அவரே நடித்தும்வருகிறார்.

மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகிவரும் இந்தப்படம் குறித்து இயக்குநர் ரஹ்மான் ஜிப்ரீல், தன்னுடைய முதல் படமானது கடல் சூழ்நிலைகளைச் சார்ந்து படமாக்க வேண்டியிருப்பதால், பெரிய ஹீரோக்களை வைத்து இயக்குவதில் உள்ள சிரமங்களை உணர்ந்ததாக தெரிவித்தார்.

படத்தின் தலைப்பு குறித்து ரஹ்மானிடம் கேட்கையில், கடலை கதைக்களமாக எடுத்திருந்ததால், 'ஜூவாலை' என பெயர் வைத்திருப்பதாகக் கூறினார். மேலும் ஒரு ஆழமான கருத்தைப் படம் அடக்கியுள்ளதாலும் படத்திற்கு அப்பெயர் வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், காதல், காமம், கோபம், வெறுப்பு போன்றவை ஒரு ஜூவாலை போல, நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருக்கிறது, அதில் பழிவாங்குதலும் ஒரு ஜூவாலைதான். நமது உடைமை, உரிமை என ஏதாவது ஒன்றுக்கு பாதிப்பு வரும்போது அங்கு பழிவாங்கும் ஜூவாலையானது பற்றி எரிய வேண்டியது அவசியமாகிறது. ஹீரோ தனது வாழ்விடத்தின் பழிவாங்குதலை ஜூவாலை ஆக்குகிறான். அது கடல் என்ற கதைக்களத்தில் வெளிப்படுகிறது என்றார்

லண்டனைச் சேர்ந்த மைக்முஸ் சாம்ப் என்னும் ஹாலிவுட் ஒளிப்பதிவாளர், ஆழ்கடல் காட்சிகளைப் படம்பிடித்துவருகிறார். இவர் 'பிரின்ஸ் ஆஃப் த சிட்டி', 'பைலட் கஃபே' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இவர் முதன் முறையாக ஒரு தமிழ் படத்திற்குப் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'சூரரைப் போற்று' வெளியீடு தாமதம்

Intro:இந்திய பெருங்கடலில் உருவாகும் படம் 'ஜூவாலை'. Body:தமிழ்சினிமாவில் வெகு சில படங்களே கடலில் படமாக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் மொத்த 75 சதவீதம் இந்தியப் பெருங்கடல் கொண்டுள்ள சிறு சிறு தீவுகளில் படம் உருவாகி வருகிறது 'ஜூவாலை' .
இயக்குநர் பாலுமகேந்திரா மற்றும் ஜோதி கிருஷ்ணா ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய
ரஹ்மான் ஜிப்ரீல் நடித்து இயக்குகிறார்.

மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படம்
குறித்து இயக்குனர்ரஹமான் ஜிப்ரீல் கூறுகையில்,

என்னுடைய முதல் படம் கடலைச் சூழ்நிலைகளைச் சார்ந்து படமாக்க வேண்டி இருப்பதால், பெரிய ஹீரோக்களை வைத்து இயக்குவதில் உள்ள சிரமங்களை உணர்தேன் அதற்காக, நானே நீண்ட முடி, தாடி சகிதம் தயாராகிவிட்டேன்.

படத்தின் தலைப்பு குறித்து?

கடல் என்ற கதைக்களத்தை கையில் எடுத்து இருந்தாலும், ’ஜூவாலை’ என பெயர் வைத்து இருப்பதில் ஒரு ஆழமான கருத்தை அடக்கியுள்ளது .

காதல், காமம், கோபம், வெறுப்பு போன்றவை ஒரு ஜூவாலை மாதிரிதான். நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருக்கிறது..
அதில் பழிவாங்குதலும் ஒரு ஜூவாலை தான் இந்தப் படம்.

நமது உடமை, உரிமை ஏதாவது ஒன்றிற்கு இழப்பு, பாதிப்பு வரும்போது அங்குபழிவாங்கும் ஜூவாலை பற்றி எரிய வேண்டியது அவசியமாகிறது.ஹீரோ தனது வாழ்விடத்தின் பழிவாங்குதலை ஜூவாலை ஆக்குகிறான். அது கடல் என்ற கதைக்களத்தில் வெளிப்படுகிறது என்கிறார் .

லண்டனைச் சேர்ந்த
ஹாலிவுட் கேமராமேன் மைக்முஸ் சாம்ப் ஆழ்கடல் காட்சிகளைப் படம்பிடித்து வருகிறார்.. இவர் பிரின்ஸ் ஆஃப் த சிட்டி, பைலட் கஃபே போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். முதன் முறையாக ஒரு தமிழ் படத்திற்கு பணியாற்றுகிறார்..

Conclusion:படத்தின் 75 சதவீத காட்சிகள் இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள தீவுகளில் படமாக்கப்பட்டு வருகிறது என்றார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.