வாஷிங்டன்: கனடாவைச் சேர்ந்தவரும், பிரபல பாப் பாடகருமான ஜஸ்டின் பீபர் (26), கோலின் டில்லெய் இயக்கியுள்ள 'எனிஒன் - Anyone' என்ற பாடலை எழுதி, அதில் நடித்துள்ளார்.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இப்பாடல் நேற்று (ஜன.1) மாலை வெளியானது. இதில் பாக்சிங் வீரராக காட்டப்படும் பீபருக்கு ஜோடியாக, அமெரிக்க நடிகை சோயி டொச் நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்பாடலுக்காக ஜஸ்டின் பீபர் தனது உடலில் இருந்த அனைத்து டாட்டூக்களையும் மேக்கப் மூலமாக மறைத்துள்ளார்.
இதன் டைம்லாப்ஸ் வீடியோவினை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பொதுவாக பீபர் தனது அனைத்து பாடல்களிலும் டாட்டூகளுடன் நடித்திருந்த நிலையில், அவரது இந்த மாற்றம் ரசிகர்களிடையே கலைவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதுதொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் ரசிகர் ஒருவர், "ஜஸ்டின் பீபரை டாட்டூக்கள் இல்லாமல் பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளது" எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பேவரைட் டிஷ் உடன் டாப்ஸியை செம்மையாக கவனித்துக் கொள்ளும் ’ராஷ்மி ராக்கெட்' படக்குழு