டிசி காமிக்ஸின் சிறந்த வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான ஜோக்கரின் முன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘ஜோக்கர்’.
டோட் பிலிப்ஸ் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில், வகீன் ஃபீனிக்ஸ் முன்னணி கதாபாத்திரமேற்று நடித்திருந்தார். ‘ஜோக்கர்’ படம் வெளியானபோதே வகீன் ஃபீனிக்ஸ் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2020 ஆஸ்கர் விழாவில் அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது.
வகீன் ஃபீனிக்ஸ் மனைவியும் நடிகையுமான ரூனி மாரா தம்பதி முதல் ஆண் குழந்தைக்கு பெற்றோராகியுள்ளனர்.
2016 ஆம் ஆண்டில் வெளியான 'மேரி மாக்டலீன்' படத்தின் மூலம் இருவரும் சந்தித்தனர். இதன்பின் இவர்கள் டேட்டிங் செய்ய ஆரம்பித்து 2017 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒன்றாக கலந்து கொண்டனர்.
அதன் பின்னர், பல மாதங்கள் கழித்து வகீன் ஃபீனிக்ஸ் ஒரு நேர்காணலில் ரூனி மாராவுடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்திருந்தார். இந்த ஆண்டு மே மாதம் ரூனி மாரா கர்ப்பிணியாக இருப்பதாக அறிவித்திருந்தார்.
இந்த குழந்தைக்கு ஃபீனிக்ஸின் மறைந்த மூத்த சகோதரரும் நடிகருமான ரிவர் பீனிக்ஸ் என்ற பெயரை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1993ஆம் ஆண்டு ரிவர் பீனிக்ஸ்(23) அளவுக்கதிகமாக போதைப்பொருட்களை உட்கொண்டதன் காரணமாக மரணம் அடைந்தார்.
ஆண் குழந்தைக்கு அப்பாவான 'ஜோக்கர்' வகீன் ஃபீனிக்ஸ் - ஜோக்கர் பட நடிகர்
லாஸ் ஏஞ்சல்ஸ்: வகீன் ஃபீனிக்ஸ் மனைவியும் நடிகையுமான ரூனி மாரா தம்பதி முதல் ஆண் குழந்தைக்கு பெற்றோராகியுள்ளனர்.