ETV Bharat / sitara

'புத்திசாலித்தனமான படங்களை கொடுங்கள்..!' - ரோகினி - rohini

"ஜீவி படத்தை போன்று, பிற இயக்குநர்களும் தைரியமாக இன்னும் அதிக சுவாரஸ்யத்துடன் புத்திசாலித்தனமான படங்களைக் கொடுத்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்" என்று நடிகை ரோகினி தெரிவித்தார்.

ரோகினி
author img

By

Published : Jul 1, 2019, 8:21 PM IST

'எட்டு தோட்டாக்கள்' படத்தை தொடர்ந்து நடிகர் வெற்றி நடித்திருக்கும் திரைப்படம் 'ஜீவி'. இயக்குநர் விஜய் கோபிநாத் இயக்கியுள்ள இப்படத்தில், வெற்றி, கருணாகரன், மோனிகா, ரோகினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த 28ஆம் தேதி வெளியான இப்படம் மக்களின் ஆரவாரத்தோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ள இப்படம் ஜனரஞ்சகமான வெற்றியை பெற்று நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட படக்குழுவினர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது, முதலில் பேசிய நடிகை ரோகினி, "அறிமுக இயக்குநர்களை மதிக்க வேண்டும் என்பதை 'தெலுங்கு சிவா' படத்தில் டப்பிங் செய்தபோது தெரிந்து கொண்டேன். ஜீவி படம் வெற்றி அடைய வேண்டிய படம். சரியான விஷயத்தை சரியான நேரத்தில் நம் சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு இந்த படம்தான் சாட்சி.

ஜீவி பட நடிகர் வெற்றி
ஜீவி பட நடிகர் வெற்றி

முதலில் மக்கள் புத்திசாலிகள் என்பதை நாம் நம்ப வேண்டும். அவர்களுடைய புத்திசாலித்தனத்தை மதித்தால் உங்கள் படம் வெற்றி பெறும் என்று பிரபல இயக்குனர்கள் கூறியுள்ளனர். மற்ற இயக்குநர்களும் தைரியமாக இன்னும் அதிக சுவாரஸ்யத்துடன் புத்திசாலித்தனமான படங்களைக் கொடுத்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்" என்று தெரிவித்தார்.

அடுத்து படத்தின் நாயகன் வெற்றி பேசுகையில், "எட்டு தோட்டாக்கள் படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வணிகரீதியாக வெற்றிபெறவில்லை. தற்போது ஜீவி படத்தை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

ஜீவி படக்குழு

Intro:ஜிபி படத்தின் சக்சஸ் மீட்Body:இயக்குனர் விஜய் கோபிநாத் இயக்கத்தில் 8 தோட்டாக்கள் படத்தின் நாயகன் வெற்றி நடித்த படம் ஜிவி. கடந்த 28ஆம் தேதி திரைக்கு வந்த இந்த படத்தில் தொடர்பியல் முக்கோண அறிவியலின் அடிப்படையில் இருவேறு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் ஒரே மாதிரியான சம்பவங்கள், ஒரு மையப்புள்ளியில் நிற்பது தான் என்று கூறும் படம் தான் ஜீவி . தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இந்நிலையில் இந்த படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் உள்ள பிரசாத் லேபில் இன்று பிற்பகல் நடைபெற்றது இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

நடிகை ரோகினி பேசுகையில்,

ஜிவி படத்தின் வெற்றி மிகவும் மகிழ்ச்சி உடையதாக இருக்கிறது. கதை கேட்ட உடனேயே எனக்கு தோன்றியது இந்தப் படம் நன்றாக ஓடும் அனைவருக்கும் பிடிக்கும் என்று. எனக்கு ஏன் அப்படித் தோன்றியது என்பது இப்போது உங்களுக்குப் புரியும் .இதில் இரண்டு விஷயங்கள் எனக்கு பிடித்த விஷயம் ஒன்று பாபு தமிழனும் கோபியும் இரட்டையர்கள் அவர்கள் இருவரும் அவ்வளவு நுணுக்கமாக ஸ்கிரிப்ட் எழுதியதோடு அல்லாமல் அதை திரைமொழி ஆக்குவதையும் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு சிறப்பாக பணியாற்றி உள்ளனர். நாம் எந்த விதமான சந்தேகங்கள் கேட்டாலும் அவற்றை தெளிவுபடுத்தக் கூடிய திறன் அவர்களிடம் இருந்தது. மற்றொன்று இந்த படத்தில் நான் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது இன்ட்ரஸ்டிங்கான விஷயம் என்னவென்றால் ஒரு ஷார்ட்டில் ஒரு விஷயம் மட்டும் கூறாமல் பல விஷயங்களை கூறும் கலையை இவர்கள் அறிந்து வைத்திருந்தனர் .இது எப்பொழுதும் ஆடியன்ஸ்க்கு மிகவும் சுவாரசியமாக அமையும் .ஜிபி படம் வெற்றி அடைந்ததை பற்றி எனக்கு ஆச்சரியம் இல்லை ஏனென்றால் இந்த படம் வெற்றி அடைய வேண்டிய படம் சரியான விஷயத்தை சரியான நேரத்தில் நம் சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு இந்த படம்தான் சாட்சி. முதலில் மக்கள் புத்திசாலிகள் என்பதை நாம் நம்ப வேண்டும் அவர்களுடைய புத்திசாலித்தனத்தை மதித்தால் உங்கள் படம் வெற்றி பெறும் என்று பிரபல இயக்குனர்கள் கூறியுள்ளார்கள் .மற்ற இயக்குனர்களும் தைரியமாக இன்னும் அதிக சுவாரசியமான புத்திசாலித்தனமான படங்களைக் கொடுத்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் அனைத்து விமர்சனங்களையும் நாங்கள் படைத்துள்ளோம் நல்ல படங்கள் கொடுத்தால் நாங்கள் நன்றாகத்தான் எழுதுவோம் என்று பத்திரிகையாளர்களும் நிரூபித்துள்ளார்கள் அவர்களுக்கு நன்றி

படத்தின் நாயகன் வெற்றி பேசுகையில்,

தோட்டாக்கள் படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வணிகரீதியாக செலவு செய்த தொகையில் பாதி கூட வரவில்லை. இருந்தாலும் என் மீது நம்பிக்கை வைத்து ஜீவி படத்தை எடுக்க ஒத்துழைப்பு கொடுத்த எனது தந்தைக்கு நன்றி. இயக்குனர் இந்த கதையை இதை நம்பி என்னிடம் கூறினார் என்று தெரியவில்லை .இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என என் மீது நம்பிக்கை வைத்த இயக்குனருக்கு நன்றி. படம் எடுத்து முடித்து விட்டோம் எப்படி ரிலீஸ் செய்யப் போகிறோம் என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது. கிளைமாக்ஸை இப்படி மாற்றியிருக்கலாம் அப்படி மாற்றி இருக்கலாமா என்ற தயக்கமும் பயமும் இருந்தது. பத்திரிகையாளர்கள் பிரிவியூ ஷோ பார்த்துவிட்டு கை தட்டிய போது தான் எங்களுக்கு நிம்மதியாக இருந்தது. இன்று இந்த படத்தை அனைத்து விதமான ஆடியன்ஸும் ஏற்றுக்கொண்டு அதிகளவில் பார்க்கின்றனர் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் கூட இந்த படம் குறித்து பேசுகிறார்கள். Conclusion:இது சக்சஸ் இது சக்சஸ் மீட்டில் இது நன்றி கூறும் ஒரு சந்திப்பு சக்சஸ் மீட் என்பது படம் ஒரு பத்து நாட்களாவது திரையரங்கில் போடவேண்டும் போட்ட பணத்தை எடுத்தால் மட்டுமே சக்சஸ்மீட் ஆகும் வரும் வாரங்களில் அதிக அளவில் மக்கள் இந்த படத்தை பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.