இயக்குநர் வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் '8 தோட்டாக்கள்' பட நாயகன் வெற்றி நடித்து வரும் படம் 'ஜீவி'. இப்படத்தின் கதாநாயகிகளாக அஸ்வினி, மோனிகா ஆகியோர் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன், மைம் கோபி, ரோகிணி, ரமா நடிக்கிறார்கள். வெற்றிவேல் சரவணா சினிமாஸ் தயாரிக்கிறது.
இப்படம் விஞ்ஞானத்திற்கும் மெய்ஞானத்திற்கும் இடையில் உள்ள மனித உணர்வுகள் சார்ந்த சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்திற்கு சுந்திர மூர்த்தி இசையமைக்கிறார். பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில், இப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் ஜூன் 28ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.