இயக்குநர் ராஜமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்திருக்கும் திரைப்படம் 'ஜிப்ஸி'. இப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்னதாகவே முடிந்திருந்தாலும் தணிக்கை குழுவானது மத்திய அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் காட்சிகளை நீக்க கூறியது.
ஆனால் அக்காட்சிகளை நீக்கினால் படத்தின் கதையில் சிக்கல் ஏற்படும் என்று கூறி அடுத்தக்கட்ட நடவடிக்கையாக தீர்ப்பாயத்திற்கு சென்றது படக்குழு.
இதைத்தொடர்ந்து ஒருவழியாக படத்திற்கு தணிக்கைச் 'ஏ' (A) சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு ரீமேக்கில் நடிக்கும் 'கபீர் சிங்'!