ETV Bharat / sitara

ஹீரோவாகும் 'கோமாளி' பட இயக்குநர்! - ஜெயம் ரவியின் கோமாளி

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் தனது அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

comali
comali
author img

By

Published : Oct 1, 2021, 8:03 AM IST

சென்னை: அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் கோமாளி. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே நடித்திருந்தனர். மேலும் இவர்களுடன் யோகி பாபு, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கோமாவில் 16 ஆண்டுகளாக இருக்கும் ஜெயம் ரவி, இயல்புநிலைக்கு திரும்பியபின் நவீன உலகில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு வியக்கிறார். அத்துடன் தனது பழைய காதலியை தேடிச்செல்லும்போது ஏற்படும் சம்பவங்களை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் படம் 'கோமாளி'.

90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையையும் தற்போதைய நவீன உலகில் நாம் தொலைத்த விஷயங்களையும் திரையில் பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருக்கும் படத்தின் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.'கோமாளி' படத்தின் ரீமேக் உரிமையை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இதில், அவரே ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இயக்குநர் பிரதீப், 'கோமாளி' படத்திலும் இறுதி காட்சியில் ஆட்டோ ஓட்டுநராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மெய்யாலுமே ரஜினி காட்சி நீக்கப்படும்பா... 'கோமாளி' தயாரிப்பாளர் உறுதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.