ETV Bharat / sitara

ஜெயம் ரவியின் 'பூமி' டீஸர் வெளியாகும் தேதி அறிவிப்பு

author img

By

Published : Mar 1, 2020, 5:10 PM IST

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ’பூமி’ படத்தின் டீஸர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

bhoomi teaser
bhoomi teaser

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான 'டிக் டிக் டிக்', 'அடங்கமறு' படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இவர் நடித்து, 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையையும் மனிதர்கள் மறந்த மனிதத்தையும் எடுத்துரைக்கும் விதமாக அமைந்த 'கோமாளி' படம் கடந்தாண்டு ஆகஸ்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில், ஹாட்ரிக் ஹிட் கொடுத்த குஷியில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை ஜெயம் ரவி வெளியிட்டார். இது ஜெயம் ரவியின் 25ஆவது படமாகும். இந்தப் படத்தை ஜெயம் ரவியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லக்‌ஷ்மண் இயக்குகிறார்.

அகில உலக பிரச்னையாக கருதப்படும் விவசாயத்தை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்துக்கு 'பூமி' என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக தெலுங்கு நடிகை நீத்தி அகர்வால் நடிக்கிறார். காமெடியனாக சதீஷ் நடிக்கிறார். இசை - டி. இமான். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு, தற்போது படத்தின் டீஸர் மார்ச் 9ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. இப்படம் மே 1ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழு அறிவத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.