ETV Bharat / sitara

ஊரடங்கு காலத்தில் தமிழ் கற்கும் ஜெயம் ரவியின் நாயகி - பூமி பட நாயகி

நடிகை நிதி அகர்வால், ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தபடியே தமிழ் மொழியைக் கற்று வருகிறார்.

Nidhhi Agerwal
Nidhhi Agerwal
author img

By

Published : May 14, 2020, 1:15 PM IST

இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளின் படங்களில் நடித்து வரும் இளம் நடிகை நிதி அகர்வால். இவர் சமீபத்தில் தெலுங்கில் வெளியான 'ismart shankar' என்கின்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தெலுங்கில் மெகா ஹிட் அடித்தது.

இதனைத்தொடர்ந்து நிதி அகர்வால் தமிழில் ஜெயம் ரவியின் 25ஆவது படமாக உருவாகும் 'பூமி' படத்தில் நடித்து வருகிறார். கரோனா வைரஸ் காரணமாக, அனைத்து மொழிப் படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வீட்டிலிருக்கும் நிதி அகர்வால் சமையல், ஓவியம் வரைதல் உள்ளிட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் இவர் முதல்முறையாக கேக் தயாரித்து எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தற்போது தமிழ் மொழி கற்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

ஆங்கிலத்தின் மூலம் தமிழைக் கற்று வருகிறார். தமிழ் வார்த்தைகளை அப்படியே ஆங்கிலத்தில் எழுதி, தங்கிலீஷ் மூலம் தமிழைக் கற்று வருவது போன்ற புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், நிதி அகர்வால். அதில் 'இது என்ன மொழியென்று யாராவது யூகிக்க முடிகிறதா' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் பேசுவதற்கான முக்கிய வார்த்தைகளை அவர் கற்று வருவதால், விரைவில் நிதி கொஞ்சும் தமிழில் அழகாகப் பேசுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க: சாக்லேட் கேக் செய்து அசத்திய நிதி அகர்வால்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.