தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வருபவர் ஜெயம் ரவி. இவரது 25ஆவது படமான ’பூமி’ திரைப்படம் விவசாயத்தை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்கிறார்.
இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். தூட்லே ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயம் ரவியின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ஹோம் மூவி மேக்கர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. ரோமியோ ஜூலியட், போகன் என ஜெயம் ரவிக்கு இரண்டு ஹிட் படங்களை கொடுத்த லக்ஷ்மண் மூன்றாவது முறையாக, பூமி படத்தில் அவரை இயக்குகிறார்.
இந்தப் படத்தில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் மீதி பாடல்கள் நாளை (டிச.13) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.