ETV Bharat / sitara

HBD ஜெயம் ரவி - தனி ஒருவனாய் போர்க்களம் கண்ட மாவீரன் - jayam ravi movies

கடின உழைப்பால் திரைத் துறையில் நட்சத்திரமாக மின்னும் ஜெயம் ரவிக்கு இன்று (செப். 10) தனது 41ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

ஜெயம் ரவி
ஜெயம் ரவி
author img

By

Published : Sep 10, 2021, 7:51 AM IST

நடிகர் ஜெயம் ரவியின் 41ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்துவருகின்றனர். தயாரிப்பாளரும், எடிட்டருமான மோகனின் மகன் ரவி.

தனது 12 வயதில் முறையாகப் பரத நாட்டியம் கற்றுக்கொண்டு அரங்கேற்றம் செய்தார். இதனையடுத்து கல்லூரி படிப்பை லயோலா கல்லூரியில் முடித்த இவர், மும்பையில் உள்ள நடிப்புக் கல்வி மையத்தில் முறையாக நடிப்பு பயிற்சி கற்றுக்கொண்டார். இவரது திரைத்துறை பயணம் 'ஆளவந்தான்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிருந்தார்.

ஜெயம் ரவி பெயர் எப்படி வந்தது?

ஜெயம் ரவி
ஜெயம் ரவி

ரவியின் அண்ணன் இயக்கத்தில், அவரது தந்தை மோகன் தயாரித்த படம் ஜெயம். தெலுங்கில் வெளியான இப்படம் அதே தலைப்பில் தமிழில் 2002ஆம் ஆண்டு வெளியானது. சிரமப்படும் குடும்பத்திலிருந்து வரும் ரவி, தன்னைவிட அந்தஸ்தில் உயர்ந்திருக்கும் நாயகி சதா மீது காதலில் விழுகிறார். சதாவை, அவரிடமிருந்து குடும்பத்தார் பிரிக்க நினைக்க, அதிலிருந்து அவர்களது காதல் எப்படிக் கைக்கூடுகிறது என்பதே படத்தில் கதையாகும்.

முறையாக நடிப்பைக் கற்றுக்கொண்டு வந்ததால் அவர் தனது முதல் படத்திலேயே ஹிட் கொடுக்க முடிந்தது. இந்தப் படத்திற்குப் பிறகுதான் அவர் ஜெயம் ரவி என்று அழைக்கப்படுகிறார்.

அண்ணன் இயக்கத்தில் 5 படங்கள்

ஜெயம் ரவி
ஜெயம் ரவி

கோலிவுட் இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்த இவர் தொடர்ச்சியாகத் தனது அண்ணன் இயக்கத்தில், 'எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி', 'சந்தோஷ் சுப்ரமணியம்', 'உனக்கும் எனக்கும்', 'தில்லாலங்கடி' ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.

கஷ்டப்பட்டுத்தான் உழைத்தேன்

ஒவ்வொரு படத்திலும் தனது திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கும் இவர் சுமார் மூன்றாண்டுகள் பட வாய்ப்பு இல்லாமல் தவித்தார். பிறகு தனிஒருவன் படம் மூலம் மீண்டும் ஜெயம் ரவி கம்-பேக் கொடுத்தார்.

அப்படத்திற்காகக் கிடைத்த விருது மேடையில் அவர் கூறியதாவது, "மூன்று வருடம் நான் வரவில்லை என்றவுடன் என்னை மறந்துவிட்டார்கள். அதை எப்படி எடுத்துக் கொள்வது என்பதே எனத் தெரியவில்லை. அப்பவும் நான் கஷ்டப்பட்டுத் தான் உழைத்தேன். ஆனால் அதற்குப் பிறகு எதற்காக வேலை செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துசெய்தேன்" எனக் கூறினார்.

ஜெயம் ரவி வெற்றியின் ரகசியம்

ஒரு நடிகர் நடிக்கும் படங்களில் வெற்றியும் இருக்கும், தோல்வியும் இருக்கும். அதேபோல்தான் ஜெயம் ரவியின் திரைப்படங்கள் வெற்றியும் பெற்றிருக்கின்றன. தோல்வியும் அடைந்திருக்கின்றன.

ஜெயம் ரவி
ஜெயம் ரவி

ஜெயம் ரவி இதுவரை ஆபாசம், அதீத வன்முறை பரப்பும் வகையில் ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை அதனால்தான் எளிதாகக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் பட்டாளம் வைத்திருக்கிறார். படத்தின் கதைகளைச் சரியாகத் தேர்வு செய்து, ஒன்று ஒன்றுக்கு வித்தியாசமாக இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறார். இவர் தற்போது தனது கடின உழைப்பால் பொன்னியின் செல்வன் படத்தில், அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

முறையாக நடிப்பைக் கற்றுக்கொண்டு கடின உழைப்பால் நட்சத்திரமாகத் திரைத் துறையில் மின்னும் ஜெயம் ரவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.