சென்னை: ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் 'பூமி' படத்தின் டீஸரை படக்குழுவினர் வெளியிட்டனர்.
விவசாயத்தை மையமாகக் கொண்டு 'பூமி' திரைப்படம், ஜெயம் ரவியின் 25ஆவது படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்கிறார்.
தெலுங்கு நடிகையான நித்தி அகர்வால் இந்தப் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். காமெடி நடிகர் சதீஷ், ராதா ரவி, சரண்யா பொன் வண்ணன், தம்பி ராமையா எனப் பலர் படத்தில் நடிக்கிறார்கள்.
இந்தி நடிகர் ரோனித் ராய் முக்கியத்துவம் மிக்க கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்துக்கு இசை - டி. இமான். ஒளிப்பதிவு - தூட்லே.
ஜெயம் ரவியின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ஹோம் மூவி மேக்கர்ஸ் படத்தைத் தயாரிக்கிறது. ரோமியோ ஜூலியட், போகன் என ஜெயம் ரவிக்கு இரண்டு ஹிட் படங்களை கொடுத்த லக்ஷ்மண் மூன்றாவது முறையாக, பூமி படத்தில் அவரை இயக்குகிறார்.
'பூமி' படம் உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படத்தின் டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
வாழ்வதற்கு புதிய கிரகத்தை உருவாக்கியிருப்பதாக கூறுவதில் தொடங்கி வேட்டி, கறுப்பு சட்டை என டீஸரில் தோன்றும் ஜெயம் ரவி, நாட்டின் வளங்கள் குறித்து முக்கிய கேள்வியைக் கேட்கிறார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
மிகவும் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து, ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்று வரும் இவர், அகில உலகப் பிரச்னையான விவசாயம் பற்றி ’பூமி' படத்தில் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: ஜெயம் ரவியின் தங்கையாகிய த்ரிஷா!