நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜகமே தந்திரம்'. ஓடிடியில் வரும் ஜுன் 18ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படம், 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.
இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகரும் 'கேம் ஆஃப் த்ரான்ஸ்' வெப் சீரிஸ் நடிகருமான ஜேம்ஸ் காஸ்மோ நடித்துள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்து ஜேம்ஸ் காஸ்மோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "ஒரு நல்ல படத்திற்காக நான் இந்தியாவில் நேரத்தைச் செலவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா ஒரு அற்புதமான நாடு. 'ஜகமே தந்திரம்' படத்திற்காக நான் ஆர்வமுடன் இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.