டெல்லி: ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான நோ டைம் டு டை படத்தின் ட்ரெய்லர் 10 இந்திய மொழிகளில் வெளியிடப்படவுள்ளது. அத்துடன் படமான ஐந்து மொழிகளில் இந்தியாவில் வெளியாகிறது.
உலகளவில் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் படங்களில் புதிய படமாக நோ டைம் டு டை பிரமாண்டமாக தயாராகியுள்ளது. 25ஆவது ஜேம்ஸ் பாண்ட் படமான இதில் டேனியில் கிரேக் பாண்டாக நடித்துள்ளார். கேசினோ ராயல், குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்கைஃபால், ஸ்பெக்ட்ரே படங்களுக்கு அடுத்து இவர் நடித்துள்ள கடைசி பாண்ட் படமாக நோ டைம் டு டை படம் அமைந்துள்ளது.
இந்தப் படத்தில் ட்ரெய்லர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இதையடுத்து இந்தப் படம் இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட வெளியாகவுள்ளது. இதற்கு முன்னதாகத் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளோடு மலையாளம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, போஜ்புரி ஆகிய மொழிகளிலும் படத்தின் ட்ரெய்லரானது வெளியிடப்படவுள்ளது.
விரைவில் இதன் ட்ரெய்லர்கள் இணையதளங்கில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில்தான் பாண்ட் வெளியாவது வழக்கமாக இருந்துவரும் வேளையில், படத்தின் ட்ரெய்லரும் இந்த மொழிகளிலேயே வெளியிட்டுவந்தனர்.
ஆனால் தற்போது வெளியாகவிருக்கும் நோ டைம் டு டை திரைப்படம் பாண்ட் வரிசை படங்களின் 25ஆவது படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளதால் இந்தப் புதிய முயற்சி மேற்கொள்வதாகத் தெரிகிறது.
முன்னதாக, பாண்ட் கதாபாத்திரங்களுக்கு வழிவிடுவதற்கான நேரம் வந்திருப்பதாக முன்னாள் பாண்ட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் கூறியிருந்தார். இதேபோல் அடுத்த பாண்ட் யார் என்பது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்தச் சூழ்நிலையில், நோ டைம் டு டை படம் மீது மட்டுமில்லாமல் அடுத்த பாண்ட் யாராக இருக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.