ETV Bharat / sitara

கரோனா தடுப்பு நிதி... ஜேம்ஸ் பாண்ட் படக்குழுவின் புதிய யுக்தி - நோ டைம் டூ டை

கரோனா தொற்று தடுப்பு நிவராண நிதிக்கு ஜேம்ஸ் பாண்ட் படக்குழுவினர் புது யுக்தியை பயன்படுத்தி நிதி திரட்ட உள்ளனர்.

James
James
author img

By

Published : Apr 30, 2020, 3:27 PM IST

கரோனா தொற்று அச்சம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல தொன்டு நிறுவனங்களும் பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்ட ஜேம்ஸ் பாண்ட்டின் 'நோ டைம் டூ டை' படக்குழுவினர் புதிய யுக்தியை கையாண்டுள்ளனர்.

அதன்படி, ஜேம்ஸ் பாண்ட்டின் 25 ஆவது படமான 'நோ டைம் டூ டை' படத்தில் பயன்படுத்தப்பட்ட கிளாப் போர்டை ஏலம் விட்டு அதன் மூலம கிடைக்கும் தொகையை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்க படக்குழு முடிவு செய்துள்ளனர்.

அந்த கிளாப் போர்டில் 'நோ டைம் டூ டை' படத்தில் பணிபுரிந்த நவோமி ஹாரிஸ், லியா சீயூடாக்ஸ், லஸானா லின்ச், இயக்குநர் கேரி ஃபோஜி, பாடகர் பில்லி எல்லீஷ் உள்ளிட்டோரின் கையெழுத்து இடம்பெறும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.