ETV Bharat / sitara

உலகளாவிய அச்சுறுத்தலை எதிர்த்து போராட்டம் - நோ டைம் டூ டை சர்ப்ரைஸ் - தந்தையான ஜேம்ஸ் பாண்ட்

கரோனா வைரஸ் தொற்று போல் உயிர் அச்சுறுத்தல் ஒன்றை நோ டைம் டூ டை படத்தில் எதிர்த்து போராடும் ஜேம்ஸ் பாண்ட், முதல் முறையாக ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஒன்றையும் அளிக்கவுள்ளாராம்.

Daniel craig in No time to die
No time to die release date
author img

By

Published : Jun 9, 2020, 10:26 AM IST

லாஸ் ஏஞ்சலிஸ்: பாண்ட் படங்களில் இதுவரை இல்லாத சர்ப்ரைஸ் விஷயம் ஒன்று, அடுத்ததாக வெளியாகவிருக்கும் நோ டைம் டூ டை என்ற புதிய ஜேமஸ்பாண்ட் படத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பாண்ட் சீரிஸ் படங்களில் 25வது படமாக உருவாகியிருக்கும் நோ டைம் டூ டை படத்தில் முதல்முறையாக தந்தையாக நடித்துள்ளார். தனது காதல் மனைவி டாக்டர் மடேலின் ஸ்வான் கேரக்டரில் நடித்திருக்கும் லியா செய்டோக்ஸுக்கு பெண் குழந்தை பிறந்து, அந்தக் குழந்தைக்கு மதில்டே எனப் ஜேம்ஸ் பாண்ட் பெயர் வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்தப் படத்தின் திரைக்கதை காட்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல இணையதளத்தில் ஏலம் விடப்பட்டது. அதில் பாண்ட், காதல் மனைவி ஸ்வான் மற்றும் அவரது 5 வயது மகள் மதில்டே ஆகியோரை தீவு ஒன்றின் பின்னணியில் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது போல் காட்சி விவரிக்கப்பட்டுள்ளது. முதல் பெண் ஏஜெண்டான நோமி தோன்றும் இந்தக் காட்சி #235 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் திரைக்கதை அமைப்பு பணிகளிலிருந்து ஆஸ்கர் வென்ற இயக்குநர் டேனி போயல் விலகிய பிறகு பிரபல நடிகையும், எழுத்தாளருமான ஃபோப் வாலர்-பிரிட்ஜ் பாண்ட் அதனை மேற்கொண்ட நிலையில், டேனியல் கிரேக் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக அவருக்கே உண்டான மாஸ் விஷயங்களோடு, ரசிகர்கள் எதிர்பார்க்காத புதுமைகளை புகுத்தியுள்ளாராம்.

கடந்த ஏப்ரல் மாதம் இந்தப் படம் வெளியாவதாக இருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் தொற்று காரணமாக வரும் நவம்பரில் வெளியாகும் என தெரிகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.