'ராஜா ராணி' படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக நுழைந்தவர், அட்லி. இதனையடுத்து அவர் 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகியப் படங்களை இயக்கினார்.
இவர் படங்களை இயக்குவது மட்டுமின்றி, 'சங்குலி புங்குலி கதவத் தொற', 'அந்தகாரம்' ஆகிய படங்களைத் தயாரித்தும் உள்ளார். இந்நிலையில் இயக்குநர் அட்லி தயாரிக்கவுள்ள அடுத்த படத்தில் நடிகர் ஜெய் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்தப் படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படம் தவிர ஜெய், இயக்குநர் பத்ரி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கக் கையெழுத்திட்டுள்ளார். முன்னதாக அட்லி இயக்கத்தில் வெளியான 'ராஜா ராணி' படத்தில் ஜெய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 250 ரசிகர்களுக்குத் தலா ரூ.5000 தந்த சூர்யா