ETV Bharat / sitara

Jai Bhim - சர்வதேச அளவில் கிடைத்த அங்கீகாரம் - கோல்டன் குளோப் விருது

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ’ஜெய் பீம்' திரைப்படம் கோல்டன் குளோப் விருதில் திரையிடத் தேர்வாகியுள்ளது.

ஜெய் பீம்
ஜெய் பீம்
author img

By

Published : Dec 2, 2021, 1:11 PM IST

நடிகர் சூர்யாவின் நடிப்பில் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு வெளியான திரைப்படம், 'ஜெய் பீம்'. பழங்குடியின மக்களுக்காகப் போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.

அதிகாரத்தை எதிர்த்துச் சட்டப் போராட்டம் மூலம் எவ்வாறு நீதி நிலைநாட்டப்பட்டது என்பது குறித்தும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் 'ஜெய் பீம்' திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் 'ஜெய் பீம்' படத்திற்குச் சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

அதாவது கோல்டன் குளோப் விருதில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்கள் பட்டியலில் ஜெய் பீம்' படம் திரையிடத் தேர்வாகியுள்ளது. ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக திரையுலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படுவது கோல்டன் குளோப் விருது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'கண்மணி அன்போடு காதலன்...!' - நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.