த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி மக்களிடம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'ஜெய் பீம்' (Jai Bhim). தீபாவளி விடுமுறையை முன்னிட்டு வெளியான இப்படத்தில் ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது, பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சினை ஆகியவை குறித்து ஜெய் பீம் திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த அரசியல் கட்சியினர், திரையுலகினர் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இத்திரைப்படமானது கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய திரைப்பட வரிசையில் முதலிடம் பிடித்து தற்போது சாதனை படைத்துள்ளது. முன்னதாக இந்தப் படம் குறிப்பிட்ட ஒரு பிரிவினரைச் சாடும் வகையில் உள்நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிறுத்தை சிவாவுக்கு சூப்பர்ஸ்டார் தந்த இன்ப அதிர்ச்சி!