ETV Bharat / sitara

'தல' பிறந்தநாளில் தனுஷ் ரசிகர்களை குஷிப்படுத்திய 'ஜகமே தந்திரம்' படக்குழு - ஜகமே தந்திரம் செகண்ட் லுக்

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' படத்தின் செகன்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Jagamae thanthiram
Jagamae thanthiram
author img

By

Published : May 1, 2020, 2:30 PM IST

'அசுரன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் #D40 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கிறார். அதே போல் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காம்ஸ்மோ முக்கியத் தோற்றத்தில் நடிக்கிறார்.

#D40 என்னும் தற்காலிக பெயரில் உருவாகி வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படத்திற்கு 'ஜகமே தந்திரம்' என பெயரிட்டுள்ளதாக அறிவித்திருந்தார். இதில் தனுஷ் கேங்ஸ்டர் வேடத்தில் நடிப்பதாக தெரிகிறது.

மோஷன் போஸ்டர் கடைசியில் உலகப் புகழ் பெற்ற ஓவியர் 'லியோனார்டோ டாவின்சி' வரைந்த 'லாஸ்ட் சப்பர்' ஓவியம் போன்று படத்தில் நடித்த கதாபாத்திரங்களை வைத்து காட்சி அமைத்திருந்தனர். மே 1ஆம் தேதி இப்படம் வெளியாகும் என மோஷன் போஸ்டரில் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது தேசிய ஊரடங்கு உத்தரவால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் செகன்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் தனுஷின் முகம் பாஸ்போர்ட்டில் சீல் வைத்தது போன்று காட்சி படுத்தியுள்ளனர். மேலும் முள்வேலியுடன் இரத்தம் சிதறி உள்ளது.

இந்த போஸ்டரிலும் 'லியோனார்டோ டாவின்சி'யின் 'ஹெட் ஆப் கிரைஸ்ட்' (Head of Christ) ஓவியத்தின் ஒரு சாயல் உள்ளது. அஜித்தின் பிறந்தநாளான இன்று தனுஷ் ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக படக்குழுவினர் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.