பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஏற்கனவே நான்கு சீசன்கள் கடந்துள்ள நிலையில், ஐந்தாவது சீசன் அடுத்த மாதம் 3 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
நிகழ்ச்சியின் புரொமோ மட்டும் வெளியான நிலையில், இதில் யார் யார் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்பது குறித்த பெயர் பட்டியல் வெளியாகாமல் உள்ளது. இருப்பினும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நபர்களின் பெயர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிறது.
அந்தவகையில் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஜாக்குலின் பிக்பாஸ் 5 ஆவது சீசனில் கலந்துகொள்ளப்போவதாக கூறப்படுகிறது. இவரை தவிர தொகுப்பாளினி பிரியங்காவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கனி, சுனிதா, மலேசியாவைச் சேர்ந்த நதியா சங் உள்ளிட்டோரும் பிக்பாஸ் 5 ஆவது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.
இதையும் படிங்க: அடேங்கப்பா 14 வாரங்களுக்கு இவ்வளவு கோடியா? ரசிகர்கள் ஷாக்!