2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி, ஜோதிகா நடித்துள்ள படம் 'ஜாக்பாட்'. கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி ஃபிலிம் பேக்டரி உலகெங்கும் வெளியிடுகிறது. ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
இவ்விழாவில் நடிகை ஜோதிகா, நடிகர் சூர்யா, இயக்குநர் கல்யாண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது இயக்குநர் கல்யாண் பேசுகையில், ”ஜோதிகா மேடத்திடம் கதையைச் சொன்னேன். அவர் உடனே ஷூட்டிங் போகலாம் என்றார். இது எனக்கு ஒரு பெரிய ஜாக்பாட்.
படப்பிடிப்பில் ஜோதிகா, பாதி சூர்யாவாகவும் பாதி ஜோதிகாவாகவும் தெரிவார். விஷால் சந்திரசேகர் ஒரு நல்ல இசை அமைப்பாளர் பவர் ஃபுல்லான இசை அமைப்பாளர் எங்களுக்கு கிடைத்திருக்கிறார்” என்றார்.
இவரைத் தொடர்ந்து ஜோதிகா பேசுகையில், சிவக்குமாருக்கு முதல் நன்றி. 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தில் இரண்டு வருடங்களுக்கு பிறகு நடிக்கிறேன்.
இப்படம் எனக்கு ரொம்ப புதுசு. இப்படி ஒரு கதையில் நான் நடித்ததே இல்லை. ரேவதி மேடத்திற்கு ஈக்குவலான ரோல். அதற்காக கல்யாண் சாருக்கு நன்றி. ஹீரோஸ் என்னன்ன பண்றாங்க என்பதைப் பார்த்து எல்லாவற்றையும் எங்களைப் பண்ணச் சொன்னார். பெண்களுக்குப் பவர் வேண்டும்.
சூர்யாதான் என்னுடைய அனைத்து முயற்சிகளுக்கும் கை கொடுப்பவர். அவர் இல்லை என்றால் நான் இல்லை. என்னுடைய ஜாக்பாட் சூர்யாதான்” என்றார்.