ETV Bharat / sitara

ஜாக்கிசானின் 'வான்கார்ட்' படம் வெளியாகும் தேதி அறிவிப்பு!

author img

By

Published : Dec 17, 2020, 1:41 PM IST

ஜாக்கிசான் நடிப்பில் உருவாகியுள்ள 'வான்கார்ட்' படத்தின் ட்ரெய்லரும் வெளியீட்டுத் தேதியும் தற்போது வெளியாகியுள்ளது.

Vanguard
Vanguard

ஆசியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக அறியப்படுவர் ஜாக்கிசான். தற்காப்புக் கலைஞர், நடிகர், ஸ்டண்ட் மேன், திரைப்படத் தயாரிப்பாளர் எனப் பன்முகத் தன்மையால் உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இவர் தற்போது ஸ்டான்லி டோன் எழுதி இயக்கிய 'வான்கார்ட்' என்னும் படத்தில் நடித்துள்ளார். அதிரடி சாகச படமாக உருவான இந்தப் படத்தில் ஜாக்கிசானுடன் யாங் யாங், மியா முகி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் நாளை (டிசம்பர் 18) வெளியாகவுள்ளது. இந்தப் படம் இந்தியாவில் கிறிஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.