ETV Bharat / sitara

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ'வில் ஒலிக்கும் இசைஞானியின் குரல் - இயக்குநர் பி.எஸ்.மித்ரன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் ஹீரோ திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

Isaigniani Ilayaraja
Isaigniani Ilayaraja
author img

By

Published : Dec 16, 2019, 4:01 PM IST

சிவகார்த்திகேயன் - பி.எஸ். மித்ரன் கூட்டணியில் உருவாகி, வரும் 20ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் 'ஹீரோ'. இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும், அர்ஜுன், இவானா, பாலிவுட் நடிகர் அபய் தியோல், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த வாரம் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தில் முதன்முறையாக இசைஞானி இளையராஜா ஒரு பாடலைப் பாடியுள்ளார். பா. விஜய் இப்பாடலை இயற்றியுள்ளார். தனது மகனும் இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா இசையில் ஏற்கனவே பல படங்களில் இளையராஜா பாடியிருக்கும் நிலையில், இப்போது ஹீரோ படத்திலும் அவருக்கென ஒரு பாடல் அமைக்கப்பட்டிப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க...

ஜோக்கர் நடிகரின் 'டாப்லெஸ்' வெப் சீரிஸ் - போஸ்டர் வெளியீடு

Intro:Body:

indiaglitz.com/ilayaraja-singing-song-in-sivakarthikeyan-hero-yuvan-shankar-raja-music-tamil-news-249620

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.