ETV Bharat / sitara

விஷாலின் சக்ரா படத்தை வெளியிட இடைக்காலத் தடை - நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு

நடிகர் விஷால் நடித்த "சக்ரா" திரைப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Interim stay for release actor vishal’s chakra movie in theatre and any OTT platform, MHC order

author img

By

Published : Feb 16, 2021, 4:56 PM IST

சென்னை: டிரைடன் ஆர்ட்ஸ் ரவி என்ற தயாரிப்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், "நடிகர் விஷால் தயாரிப்பில் உருவாகியுள்ள "சக்ரா" திரைப்படத்தின் கதையை அப்படத்தின் இயக்குநர் ஆனந்தன் தன்னிடம் தெரிவித்து படத்தை தயாரிக்க ஒப்பந்தம் போட்டுவிட்டு,

தற்போது விஷால் தயாரிப்பில் அவரையே கதாநாயகனாக வைத்து படத்தை எடுத்துள்ளார். இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது" என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன்சுப்ரமணியன், தங்கள் தரப்பிடம் காப்புரிமை உள்ள நிலையில் "சக்ரா" படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.கார்த்திகேயன், இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து, வழக்கு குறித்து நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.