பாலிவுட்டில் அமிதாப் பச்சன், ஆயுஷ்மன் குரானா நடிப்பில் உருவான 'குலோபோ சிதாபோ', வித்யா பாலனின் நடிப்பில் உருவான 'சகுந்தலா தேவி', தமிழில் ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்', கீர்த்தி சுரேஷின் 'பெண்குயின்' உள்ளிட்ட பல திரைப்படங்கள் டிஜிட்டல் தளமான OTTயில் விரைவில் வெளியாக உள்ளன. அதேபோல் பல திரைப்படத்தின் படக்குழுவினரும் தங்களது படங்களை OTTயில் வெளியிடுவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
இது குறித்து திரைப்பட உரிமையாளர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் ஐநாக்ஸ் குழுமம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "தங்கள் படத்தை திரையரங்கில் வெளியிடாமல் ஆன்லைனில் வெளியிடுவது குறித்து ஒரு தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பற்றி ஐநாக்ஸ் நிறுவனம் கடும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்த விரும்புகிறது. அந்த அறிவிப்பு உலகளாவிய திரைப்பட வெளியிடலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி.
திரைப்படத் தாயாரிப்பாளர்களுக்கும் திரையரங்களுக்கும் எப்போதும் ஒரு பரஸ்பர புரிதல் இருந்தே வந்துள்ளது. இதில் ஒருவருடைய நடவடிக்கைதான் இன்னொருவரது வருவாய்க்கு வழிவகுக்கும். நல்ல படங்கள் அதிகமாக வரவேண்டும், என்பதற்காக நாடு முழுவதும் உலகத்தரம் வாய்ந்த திரைகளை ஐநாக்ஸ் நிறுவியுள்ளது. பல்லாண்டு காலமாக நீடித்து வரும் இந்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் உதவி வந்துள்ளது. ஒருவரோடு ஒருவர் தோள் கொடுத்து திரைத்துறையை மீட்டெடுக்க வேண்டிய இந்த நேரத்தில் சில பங்குதாரர்கள் இந்த பரஸ்பர உறவுமுறையில் ஆர்வமில்லாமல் செயல்படுவது வருத்தமாக உள்ளது.
-
STATEMENT BY INOX ON A PRODUCTION HOUSE’S ANNOUNCEMENT TO RELEASE THEIR MOVIE ON AN OTT PLATFORM BY SKIPPING THE THEATRICAL RUN pic.twitter.com/NfqoYV2QRx
— INOX Leisure Ltd. (@INOXMovies) May 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">STATEMENT BY INOX ON A PRODUCTION HOUSE’S ANNOUNCEMENT TO RELEASE THEIR MOVIE ON AN OTT PLATFORM BY SKIPPING THE THEATRICAL RUN pic.twitter.com/NfqoYV2QRx
— INOX Leisure Ltd. (@INOXMovies) May 14, 2020STATEMENT BY INOX ON A PRODUCTION HOUSE’S ANNOUNCEMENT TO RELEASE THEIR MOVIE ON AN OTT PLATFORM BY SKIPPING THE THEATRICAL RUN pic.twitter.com/NfqoYV2QRx
— INOX Leisure Ltd. (@INOXMovies) May 14, 2020
இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்க வேண்டிய தயாரிப்பாளர்கள் ஆபத்தில் உதவாத நண்பர்களாக மாறுகிறார்கள். இதுபோன்ற நண்பர்களால் ஐநாக்ஸ் நிறுவனம் தன்னுடைய தேர்வுகளை ஆராய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறது.
அனைத்துத் தயாரிப்பாளர்களையும் திரையரங்க வெளியிடலைத் தவிர்க்காமல் பழைய நடைமுறையையே தொடருமாறு வலியுறுத்துக்கிறது. அதுவே இந்தச் சங்கிலித் தொடரில் இருக்கும் பயனாளர்கள் அனைவருக்கும் நல்லது" என குறிப்படப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏ... வாத்தி கம்மிங் ஒத்து... 'மாஸ்டர்' புதிய அப்டேட்டை வெளியிட்ட ஐநாக்ஸ்