ETV Bharat / sitara

'இன்மை உங்களை ஆச்சர்யப்படுத்தும்' - நடிகர் சித்தார்த் - Siddharth movies

'நவரசா' ஆந்தாலஜி படத்தில் இடம்பெற்றுள்ள 'இன்மை' பகுதி உங்களை ஆச்சரியப்படுத்தும் என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

navarasa
navarasa
author img

By

Published : Jul 22, 2021, 3:54 PM IST

இயக்குநர்கள் மணிரத்னமும், யூப் சினிமாஸும் இணைந்து தயாரித்துள்ள ஆந்தாலஜி திரைப்படம், 'நவரசா'. அதில் பயத்தின் உணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'இன்மை' படத்தை, இயக்குநர் ரதீந்திரன் பிரசாத் இயக்கியுள்ளார்.

சித்தார்த் இதில் நாயகனாக நடித்துள்ளார். நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அடுத்த மாதம் 6ஆம் தேதி வெளியாகும் இப்படம் கரோனாவால் பாதித்த திரைத்துறைத் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்மை என்றால் என்ன?

இதுகுறித்து நடிகர் சித்தார்த் கூறியதாவது, "மணிரத்னம், ஜெயேந்திரா எனக்கு 'இன்மை' படத்தில் வாய்ப்பு வழங்கியபோது, நான் மிகமிக மகிழ்ச்சியடைந்தேன். நவரசங்களில் ஒரு உணர்வைக் குறிக்கும் இன்மை என்பதின் அர்த்தம், பற்றாக்குறை அல்லது ஏதும் இல்லாதது என்பதாகும்.

'இன்மை' என்ற வார்த்தையைக் கேட்கும்போதே மக்களின் ஆர்வம் அதிகரிக்கும். கரோனாவால் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள, திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவும் ஒரு முன்னெடுப்பாக, இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இயக்குநர் ரதீந்திரன் பிரசாத், நடிகை பார்வதி ஆகிய திறமையாளர்களுடன் இணைந்து பணியாற்றியது, ஒரு அற்புதமான அனுபவம் .

ஒன்பது வெவ்வேறு கதைகள்

மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளைக் கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை 'நவரசா' ஆந்தாலஜி படம் கூறியுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று 190 நாடுகளில் வெளியாகிறது" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பா. ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.