தமிழில் சர்வம், நரகாசூரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இந்திரஜித் சுகுமாரன்.
நடிகர் பிரித்விராஜின் சகோதரரான இவர், தற்போது கௌதம் மேனன் இயக்கும் குயின் வெப்சீரிஸில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், பிபின் பால் சாமுவேல் இயக்கும் 'ஆஹா' என்ற புதிய படத்தில் நடிக்கிறார். முழுவதும் விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும், இந்தப்படத்தில் இந்திரஜித்துக்கு ஜோடியாக இளம் நடிகை சாந்தி பாலகிருஷ்ணன் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் அமித் சக்காலக்கல், அஸ்வின்குமார், மனோஜ் கே ஜெயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
வடம் பிடித்தல் விளையாட்டை கதைக்களமாக வைத்து உருவாகி வரும், இந்தப்படத்தை சாசா புரொடெக்ஷன் நிறுவனம் சார்பில் பிரேம் ஆப்ரஹாம் தயாரிக்கிறார்.
2020 கோடை விடுமுறையை முன்னிட்டு இந்திரஜித்தின் 'ஆஹா' படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திரஜித்தின் பிறந்த நாளையொட்டி, படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. கிராமத்து நடுத்தர வயது இளைஞரின் தோற்றத்தில் இந்திரஜித்தின் புதிய அவதாரம் கேரள ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Here is the first look poster of a project I’m so very looking forward to in 2020! My first sports drama, AAHA!
— Indrajith Sukumaran (@Indrajith_S) December 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Thank you @PrithviOfficial for the official launch.. 🤗✨
#BibinPaulSamuel #PremAbraham #TobitChirayath #TheWarWithin #Aaha pic.twitter.com/MXhJEEE7UZ
">Here is the first look poster of a project I’m so very looking forward to in 2020! My first sports drama, AAHA!
— Indrajith Sukumaran (@Indrajith_S) December 17, 2019
Thank you @PrithviOfficial for the official launch.. 🤗✨
#BibinPaulSamuel #PremAbraham #TobitChirayath #TheWarWithin #Aaha pic.twitter.com/MXhJEEE7UZHere is the first look poster of a project I’m so very looking forward to in 2020! My first sports drama, AAHA!
— Indrajith Sukumaran (@Indrajith_S) December 17, 2019
Thank you @PrithviOfficial for the official launch.. 🤗✨
#BibinPaulSamuel #PremAbraham #TobitChirayath #TheWarWithin #Aaha pic.twitter.com/MXhJEEE7UZ