கெளபாய் பட சீரியஸான இண்டியானா ஜோன்ஸ் படத்துக்கு உலகம் முழுவதும் பல்வேறு வரவேற்புக்கள் உள்ளன. 2008ஆம் ஆண்டு வெளியான 'இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி கிங்டம் ஆப் கிரிஸ்டல் ஸ்கல்', 1989ஆம் ஆண்டு வெளியான 'இண்டியானா ஜோன்ஸ் அண்டு தி லாஸ்ட் குருசேட்', 1984ஆம் ஆண்டு வெளியான 'இண்டியானா ஜோன்ஸ் அண்டு தி டெம்பிள் ஆப் டூம்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்.
இவர் தற்போது 'இண்டியானா ஜோன்ஸ் 5' என்னும் படத்தை இயக்கும் முயற்சியில் இருந்தார். ஆனால் தற்போது இப்படத்தை இயக்கும் முடிவில் இருந்து விலகவுள்ளார். இவர் இயக்குநராக இல்லாவிட்டலும் தயாரிப்பாளராக இருப்பார். அதற்கு பதிலாக 'ஃபேர்டு வி ஃபெராரி' இயக்குநர் ஜேம்ஸ் மங்கோல்ட் இயக்க இருப்பதாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் இண்டியானா ஜோன்ஸ் 5 படத்தில் நடிதர் ஹாரிசன் ஃபோர்டு நடிப்பது உறுதியாக்கப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும் என ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் நெருங்கிய நபர் கூறியுள்ளார்.
'ஃபேர்டு வி ஃபெராரி' சிறந்த எடிட்ங், சிறந்த சவுண்ட் எடிட்ங் ஆகிய இருபிரிவுகளில் ஆஸ்கர் விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிங்க: பிரமாண்ட படங்கள் கொடுத்த தந்தை... அந்த மாதிரி படங்கள் கொடுக்க விரும்பு மகள்!