ETV Bharat / sitara

#HBDமிஷ்கின் - சித்திரத்தைப் பேசவைத்த இயக்குநர்

author img

By

Published : Sep 20, 2021, 7:51 AM IST

Updated : Sep 20, 2021, 8:46 AM IST

'கதை சொல்லும் பொறுப்பில் இயக்குநராக நிற்கின்றேன். அதனால் வாழ்க்கைச் சம்பந்தமான விஷயங்களைப் படத்தில் சொல்லும் பொறுப்பு எனக்கு இருக்கிறது' - இதைச் சொல்லியவர் இயக்குநர் மிஷ்கின். அவரது பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி பார்ப்போம்.

HBDமிஷ்கின்
HBDமிஷ்கின்

தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு ஒரு படத்தை மட்டும் இயக்குபவர் மிஷ்கின். அது என்ன ஆண்டுக்கு ஒரு படம்தானா என நீங்கள் நினைக்கலாம். ஒரு படம் இயக்கினாலும் அது வெற்றிப் படமாகத் தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் மிஷ்கின்.

இவரது இயற்பெயர் சண்முக ராஜா; அதை அவரே மாற்றிக்கொண்டார். ரஷ்ய மொழி எழுத்தாளர் ஒருவரின் நூலால் ஈர்க்கப்பட்ட இவர், அதில் வரும் இளவரசர் கதாபாத்திரத்தின் பெயரான மிஷ்கின் என்பதைத் தனது பெயராகச் சூட்டிக்கொண்டார். சிறு வயது முதல் புத்தக வாசிப்புப் பழக்கம் கொண்ட இவர் புத்தகம் படிப்பதிலேயே தனது வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்துள்ளார்.

மிஷ்கின்
மிஷ்கின்

சினிமா மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், 'சித்திரம் பேசுதடி' படம் மூலம் 2006ஆம் ஆண்டு திரைத் துறைக்குள் நுழைந்தார். இவர் இயக்கிய முதல் படமே அந்த ஆண்டு வெற்றிப் படங்களில் ஒன்றானது. அவரது அடுத்த படமான, 'அஞ்சாதே' இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2008ஆம் ஆண்டு வெளியானது.

அஞ்சாதே
அஞ்சாதே

நண்பர்களாக இருக்கும் நரேனும்-அஜ்மலும் எதிரியாக மாறுவதும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் மிக நேர்த்தியாகச் செதுக்கியிருப்பார் மிஷ்கின். தொடர்ந்து இவரது படங்கள் ஹிட் கொடுத்ததால், அடுத்தடுத்து இவர் இயக்கும் படங்கள் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

தொடர்ந்து, 'நந்தலாலா', 'யுத்தம் செய்', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' என்று ஆண்டுக்கு ஒரு படம் கொடுத்தாலும் அவற்றை வெற்றிப் படங்களாக்கி கொடுத்து, முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இணைந்தார். பொதுவாகத் தமிழ்த் திரை ரசிகர்களுக்குப் பேய் படம் என்றாலே பிடிக்கும். பேய் என்றால் மிகவும் ஆக்ரோஷமாக அடுத்தவர்களைப் பழிவாங்கத் தான் ஆவியாக அலைகிறது என நாம் சிறுவயது முதல் அனைவரும் சொல்லி கேட்டிருக்கிறோம்.

ஆனால் 'பிசாசு' படத்தில் வரும் பேய் சற்று மாறானது. அந்தப் பேய் யாரையும் பழி வாங்கவோ அல்லது கொலை செய்யவோ வந்திருக்காது. மாறாகத் தனது உயிரைக் கடைசி நேரத்தில் காப்பாற்ற நினைத்த நாயகனின் மீது காதலில் விழ, அவரைக் காண்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருக்கும்.

பிசாசு நாயகி
பிசாசு நாயகி

ஒரு பேய் கதாபாத்திரத்தை அவ்வளவு அழகாகவும், மென்மையாகவும் காண்பித்திருப்பார். அதனால்தான் என்னவோ படத்தைப் பார்த்த ஒவ்வொருவரும், பேய் கதாபாத்திரத்தில் நடித்த ஹீரோயின் மீது காதலில் விழுந்தார்கள். படத்தின் நாயகன், நாயகி ஒரு பக்கம் இருக்க நாயகியின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராதாரவியின் நடிப்பைச் சொல்லவா வேண்டும்; வேற லெவல் என்று ரசிகர்கள் விசிலடித்துக் கொண்டாடினர்.

'வேண்டாம் மா... வா நம்ம வீட்டுக்குப் போகலம்' என ராதாரவி கண்ணீர் மல்க நடித்ததைப் பார்த்த ஒவ்வொரு ரசிகனின் கண்களிலும் நிச்சயம் கண்ணீர் வந்திருக்கும். ஒரு இயக்குநராக அவர் நினைத்ததை, ராதாரவிக்குள் புகுத்தி வெற்றிகண்டார் மிஷ்கின்.

மிஷ்கின்- ராதா ரவி
மிஷ்கின்- ராதாரவி

ஒருமுறை பேட்டியில் இவரிடம் எதற்காகத் திகில் கலந்த படங்களையே எப்போதும் இயக்குகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர், "ரசிகர்கள் 150 ரூபாய் கொடுத்துப் படத்தைப் பார்க்க வருகின்றனர். படம் பார்த்தவுடன் ஆம்... பார்த்தேன்.

ஜாலியாக இருந்தது என்று மட்டும் சொல்லக் கூடாது. அதற்காக நான் படத்தை இயக்கவில்லை. கதை சொல்லும் பொறுப்பில் இயக்குநர் நான் நிற்கிறேன். அதனால் வாழ்க்கைச் சம்பந்தமான விஷயங்களைப் படத்தில் சொல்லும் பொறுப்பு எனக்கு இருக்கிறது" எனத் தனது தொழில்மீதான காதலை மிக அழுத்தமாகக் கூறினார்.

கதைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கும் மிஷ்கினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

Last Updated : Sep 20, 2021, 8:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.