ETV Bharat / sitara

பாலிவுட் பிரபலங்களின் ஒரு விரல் புரட்சி..! - PARLEMENT ELECTION

நான்காவது கட்டமாக நடைபெற்ற மக்களவைத்தேர்தலில் பாலிவுட் பிரபலங்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான் அமீர்கான், சல்மான் கான், நக்மா, க்ருத்திக் ரோஷன் உள்ளிட்டோர் வாக்களித்த புகைப்படங்கள் வைரலாகிவருகிறது.

பாலிவுட் பிரபலங்கள்
author img

By

Published : Apr 29, 2019, 7:23 PM IST

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதில், முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11, 18, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்நிலையில், இன்று நான்காம் கட்டமாக பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறவடைந்தது. எனவே, மக்களவைத் தேர்தலில் மக்களோடு மக்களாக தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றிய பாலிவுட் நட்சத்திரங்கள் வாக்களித்த பின்னர் மை வைத்த விரலை புகைப்படம் எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதில், நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மனைவி ஜெயா பாதுரி, மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் குடும்பத்துடன் வந்து வாக்களிக்கும் காணொளி வைரலாகியுள்ளது.

bollywood Actors voting
பாலிவுட் பிரபலங்கள்

இதேபோன்று, பாலிவுட் பிரபலங்களான, ஷாருக்கான், அமீர்கான், பிரியங்கா சோப்ரா, சல்மான் கான், க்ருத்திக் ரோஷன், மாதுரி தீக்ஷித், கிரண் ராவ், சஞ்சய் கான், பாடகர் சங்கர் மகாதேவன், ரவி கிஷான், மகேஷ் பட், திவ்யா தத்தா, வருண் தவான், அனுபம் கெர், சையித் கான், சன்னி தியோல், கரீனா கபூர், கங்கனா ரனாவத், தமிழ் நடிகர் மாதவன் நடிகை நக்மா உள்ளிட்டோர் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்துள்ளனர். தற்போது இவர்களது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.