ETV Bharat / sitara

'நடிகர் சூர்யாவுடன் நடிக்க ஆசை..!' - காமெடி நடிகை மதுமிதா

உதயநிதி ஸ்டாலின் ஹீராவாக அறிமுகமான 'ஓகே ஓகே' படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக 'ஜாங்கிரி' கேரக்டரில் கலக்கியிருந்தார் மதுமிதா. தொடர்ந்து இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஞ்சனா-2, காஷ்மோரா, மோகினி உள்ளிட்ட படங்களில் காமெடி ரோல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இந்நிலையில் சமீபத்தில் ஜீ.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா படத்தில் தர லோக்கலான வேடத்தில் மதுமிதா தூள் கிளப்பியிருக்கிறார். அவரது நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த பரபரப்புக்கு இடையில் நடிகை மதுமிதா, ஈடிவி பாரத்துக்காக அளித்த பிரத்யேக பேட்டி

author img

By

Published : Apr 8, 2019, 2:45 PM IST

நடிகை மதுமிதா

குப்பத்து ராஜா படம் குறித்து..?

இந்த படத்தில் கதாநாயகிக்கு ப்ரண்டாக, குப்பத்தில் இருக்கக்கூடிய பெண்ணாக, பட்டறையில் வேலை செய்யும் கதாபாத்திரத்தில் அழுக்கு உடை அணிந்து, லோக்கல் வசனங்கள் பேசி, தர லோக்கல் நடனமாடி கலகலப்பான கேரக்டரை செய்திருக்கிறேன்.

தொடர்ந்து வடசென்னை கேரக்டரில் நடிக்க என்ன காரணம்..?

முன்பெல்லாம் 10 படங்கள் வாய்ப்பு வரும். அதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து நடிப்போம். இப்ப வருவதே நாலைந்து படங்கள்தான். அதுவும் இந்த பொண்ணு லோக்கலாதான் நடிக்கும் என்று இயக்குநர்கள் நினைக்கிறார்களோ என்னவோ தெரியல.. அதனால தொடர்ந்து எனக்கு அந்த மாதிரி கதாபாத்திரங்கள்தான் வருகிறது. நானும் டீசன்டான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் ஐயராத்து பாஷை எல்லாம் நான் மிகவும் நன்றாக பேசுவேன். ஆனால் நம்பி வாய்ப்பு தர மாட்றாங்க. ஆரம்பத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடித்தோமோ அதே கண்ணோட்டத்தில் தான் அனைவரும் பார்க்கிறார்கள். இதிலிருந்து தனித்துவமாக நம்மை உருவாக்கிக் கொள்வது ஒரு தனித்திறமைதான். அதற்கான வாய்ப்புகள் வரும்போது கண்டிப்பாக நடிப்பேன்.

மதுமிதா பேட்டி

காமெடி நாயகர்கள் போல நீங்களும் கதாநாயகியாக நடிப்பீர்களா..?

கிடைக்கிற வாய்ப்பை ஒழுங்கா நடிச்சிட்டு போவோமே. தேவையில்லாம ஆசைப்பட்டு, உள்ளதும் போச்சுடா நொள்ள கண்ணா என்று சொல்வார்கள். அந்த மாதிரி நான் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை. இருக்கிற வாய்ப்பு சிறப்பாக வந்தால் போதும். எனக்கு அதிக கேரக்டர் ரோல் நடிக்கணும் என்று ஆசை. 60 வயது மாநிறம் படத்தில் நடிக்கும்போது சென்டிமென்ட் காட்சிகளில் சூப்பரா நடிக்கிற என்று இயக்குனர் ராதாமோகன் என்னை பாராட்டினார். இதேபோல் மற்ற இயக்குனர்கள் நன்றாக நடிப்பேன் என்று நினைத்தால் சிறப்பான வாய்ப்புகள் எனக்கு அமையும். அதிகம் கேரக்டர் ரோல் செய்ய வேண்டும் என்று விருப்பம். மனோரமா போன்று நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய பெரிய ஆசை. தற்போது வரும் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் கூட காமெடி கலந்து வெளிவருகின்றன. அதில் அவர்களுடன் சேர்ந்து நடிக்க விருப்பப்படுகிறேன்.

நீங்கள் எந்த ஹீரோவுடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறீர்கள்..?

நடிகர் சூர்யாவுடன் இணைந்து காமெடியாக நடிக்க விருப்பம்.

லோக்கலான கதாபாத்திரங்கள்தான் எனக்கு தொடர்ந்து வருகிறது நடிகை மதுமிதா வருத்தம்....நடிகை மதுமிதாவுடன் ஒரு சிறப்பு பேட்டி

குப்பத்து ராஜா படம் குறித்து

இந்த படத்தில் கதாநாயகிக்கு பிரண்டா குப்பத்தில் இருக்கக்கூடிய பெண்ணாக பட்டறையில் வேலை செய்யும்  கதாபாத்திரம் அழுக்கு  உடை அணிந்து லோக்கல்  வசனங்கள் லோக்கல் நடனம் என கலகலப்பா பண்ணியிருக்கேன்.

தொடர்ந்து நீங்கள் வடசென்னை தொடர்பான படங்களிலேயே நடிக்கிறீர்கள் இதற்கு காரணம் என்ன?

முன்பெல்லாம் 10 படங்கள் வாய்ப்பு வரும் அதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து நடிப்போம். இப்ப வருவதே நாலைந்து படங்கள் தான் அதுவும் இந்த பொண்ணு லோக்கலா தான் நடிக்கும் என்று script writers, டைரக்டர் நினைக்கிறார்களோ என்னவோ தெரியல ஆனா தொடர்ந்து எனக்கு அந்த மாதிரி கதாபாத்திரங்கள்தான் வருகிறது நான்  அதிகமாக டீசன்டான கதாபாத்திரங்களும் நடித்து இருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் ஐயராத்து பாஷை எல்லாம் நான் மிகவும் நன்றாக பேசுவேன். ஆனால் நம்பி வாய்ப்பு தர மாட்டாங்க என்ன செய்வது.
ஆரம்பத்தில் நம்ப எந்த கதாபாத்திரத்தில் படித்தோமோ அதே கண்ணோட்டத்தில் தான் அனைவரும் பார்க்கிறார்கள் இதிலிருந்து  தனித்துவமாக நம்மை உருவாக்கிக் கொள்வது ஒரு தனி திறமை தான் அதற்கான வாய்ப்புகள் வரும்போது கண்டிப்பாக நடிப்பேன்.

காமெடி நாயகர் எல்லாம் கதாநாயகனாக நடிக்கிறார்கள் நீங்கள் ஏன் கதாநாயகியாக நடிக்க கூடாது அதற்கான வாய்ப்புகள் வந்ததா?

கிடைக்கிற வாய்ப்பை ஒழுங்கா நடிச்சிட்டு போவோமே தேவையில்லாமல் ஆசைப்பட்டு உள்ளதும் போச்சுடா நொள்ள கண்ணா என்று சொல்வார்கள் அந்த மாதிரி நான் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை. இருக்கிற வாய்ப்பு சிறப்பாக வந்தால் போதும், எனக்கு அதிக கேரக்டர் ரோல் நடிக்கணும் என்று ஆசை 60 வயது மாநிறம் படத்தில் நடிக்கும்போது சென்டிமென்ட் காட்சிகளில் சூப்பரா நடிக்கிற என்று இயக்குனர் ராதா மோகன் என்னை பாராட்டினார். இதேபோல் மற்ற இயக்குனர்கள் நன்றாக நடிப்பேன் என்று நினைத்தால் சிறப்பான வாய்ப்புகள் எனக்கு அமையும் .அதிகம் கேரக்டர் ரோஸ் செய்ய வேண்டும் என்று விருப்பம் மனோரமா  போன்று நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய பெரிய ஆசை.

தற்போது வரும் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் கூட காமெடி கலந்து வெளிவருகின்றன நீங்கள் யாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்

நடிகர் சூர்யாவுடன் இணைந்து  காமெடியாக நடிக்க விருப்பம்.

பேட்டி மோஜோவில் அனுப்புகிறேன்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.