ETV Bharat / sitara

'அஜித்துடன் திரையைப் பகிர்ந்ததால் உற்சாகம்'; மனம் திறந்த ஹூமா குரேஷி - வலிமை அனுபவம் குறித்து பேசிய ஹூமா குரேஷி

வலிமை படத்திற்கான அழைப்பு வந்தபோது, நான் இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவருடன் திரையைப் பகிரப் போகிறேன் என்பது மிகப்பெரும் உற்சாகத்தை தந்ததாக ஹூமா குரேஷி தெரிவித்துள்ளார்.

மனம் திறந்த ஹூமா குரேஷி
மனம் திறந்த ஹூமா குரேஷி
author img

By

Published : Feb 23, 2022, 7:42 PM IST

அஜித் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் கரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டது.

நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்னர் இத்திரைப்படம் நாளை (பிப்ரவரி 24) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் வலிமையில் பணிபுரிந்த தனது அனுபவம் குறித்து ஹூமா குரேஷி பகிர்ந்துள்ளார்.

ஹோம்லி லுக்கில் ஹூமா
ஹோம்லி லுக்கில் ஹூமா

அவர் பேசுகையில், “வலிமை எனது சினிமா கேரியரில் மிகவும் சிறப்பான படம். எனது திறமையை பரிசோதித்து கொள்ள வலிமையால் அற்புதமான வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய கேரக்டர் நிறைய ஆக்சன் காட்சிகளைக் கொண்ட நேர்மையான காவல்துறை அலுவலராக உருவாகியுள்ளது. ஒவ்வொரு முறையும் ஆக்சன் காட்சிகள் என்றாலே உற்சாகமாக இருப்பேன்.

ஹூமா குரேஷி கிளாமர் போஸ்
ஹூமா குரேஷி கிளாமர் போஸ்

பொதுவாக ஒரு ஆக்‌சன் - த்ரில்லர் திரைப்படத்தில் ஆண் கதாபாத்திரங்களுக்கு மட்டுமே நடிக்கும் வாய்ப்புகள் இருக்கும். ஆனால், இயக்குநர் வினோத் பெண் கதாபாத்திரங்களை வலுவானதாக உருவாக்கி திரைத்துறைக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். குறிப்பாக எனது பாத்திரம் திரையில் நிறைய இடத்தைப் பெற்றிருப்பதை பார்க்கையில் மிக மகிழ்ச்சியாக உள்ளது. முன்னரே பில்லா 2 படத்தில் அஜித்தும், நானும் இணைந்து பணியாற்ற வேண்டியது.

ஹூமா குரேஷி கிளாமர் போஸ்
ஹூமா குரேஷி கிளாமர் போஸ்

சில காரணங்களால் அது நடக்கவில்லை. வலிமை படத்திற்கான அழைப்பு வந்தபோது, நான் இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவருடன் திரையைப் பகிரப் போகிறேன் என்பது மிகப்பெரும் உற்சாகத்தை தந்தது. 'வலிமை'யில் அஜித்குமாருடன் இணைந்து நான் நிறைய காட்சிகளில் வருகிறேன். எங்கள் காட்சிகளை ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடுவார்கள்" என்றார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிள் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'பிக் பி'-யை இயக்கிய நாகராஜ் மஞ்சுளே - வெளியானது ஜூண்ட் ட்ரெய்லர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.