வெற்றி, தோல்வி, காதல், காமம், மகிழ்ச்சி, சோகம், கொண்டாட்டம், போராட்டம், அமைதி என அனைவரது மனதிலும் தோன்றும் எக்கச்சக்க கனவுகளுக்கும் இசையால் உயிர்கொடுத்து கொண்டிருப்பவர் இளையராஜா.
இவர் பெயரை சொன்னால் இசைகள் மழலைகளோடு கவிதை பாடும். மக்களின் மனங்களை வென்ற இசைஞானி தனது இசையால் பல சாதனைகளை புரிந்துவருகிறார்.
இசைத் துறையில் செய்த சாதனைகளுக்காக மதுரை காமராசர், அண்ணா உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிடமிருந்து 4 டாக்டர் பட்டங்களை இளையராஜா பெற்றுள்ளார்.
இந்த நிலையில், குண்டூரில் உள்ள விக்னான் என்ற தனியார் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. இது அவருக்கு ஐந்தாவது டாக்டர் பட்டமாகும்.