ETV Bharat / sitara

4ஆவது மனைவியை விவாகரத்து செய்த ஹாலிவுட் நடிகர்! - ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ்

வாஷிங்டன்: நான்கு நாள் மட்டும் சேர்ந்து வாழ்ந்த தனது நான்காவது மனைவியிடம் இருந்து, பிரபல ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ் விவாகரத்து பெற்றுள்ளார்.

nicholas cage
author img

By

Published : Jun 5, 2019, 1:29 PM IST

பிரபல ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ் ஃபேஸ் ஆஃப், நேஷனல் ட்ரெஷர், கோஸ்ட் ரைடர் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர். இவர் மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து செய்துகொண்டவர். இந்நிலையில், 51 வயதான நிக்கோலஸ் கேஜ், மார்ச் மாதம் எரிக்கா கொய்கே என்ற பெண்ணை நான்காவது மனைவியாக திருமணம் செய்துகொண்டார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற இந்த திருமணம் தன்னை ஏமாற்றி நடத்தப்பட்டதாகவும், திருமணத்தின்போது தான் அதிகமான குடிபோதையில் இருந்ததாகவும் திருமணம் நடைபெற்ற நான்காவது நாளே கூறி தனது புதிய மனைவியுடன் விடுதிக்கு வெளியே சண்டை போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும், எரிக்காவிற்கு வேறு நபருடன் இருக்கும் தொடர்பை மறைத்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதால் இந்த திருமணத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் நீதிமன்றத்தை நாடினார். எனினும், இதற்கு மறுப்பு தெரிவித்த எரிக்கா, தனக்கு மாதந்தோறும் கணவரால் அளிக்கப்படும் பண உதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், மே 31ஆம் தேதி நிக்கோலஸ் கேஜ், எரிக்கா தம்பதிக்கு நீதிமன்றம் விவாகரத்து அளித்தது. எரிக்காவிற்கு நிக்கோலஸ் கேஜ் பண உதவி அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. நிக்கோலஸ் தனது திருமண பந்தத்தை நான்கு நாட்களில் முறித்த இச்சம்பவம் ஹாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.