தமிழ்த் திரைத் துறையில் ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் 'மீசையை முறுக்கு' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
அதன்பின்னர் 'நட்பே துணை', 'நான் சிரித்தால்', 'சிவகுமாரின் சபதம்' போன்ற படங்களில் நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஆதி நடிப்பில் உருவாகியுள்ள 'அன்பறிவு' படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
அஸ்வின் ராம் இயக்கத்தில், ஹிப்ஹாப் ஆதி முதல்முறையாக, இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக காஷ்மீரா நடித்துள்ளார்.
பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்த 'அன்பறிவு'
மேலும் நெப்போலியன், விதார்த், சரத்குமார், ஊர்வசி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படமானது வருகின்ற ஜனவரி 7ஆம் தேதி டிஷ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் 'அன்பறிவு' திரைப்படத்தின் ட்ரெய்லர் கமல்ஹாசன் முன்னிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இதனால் கமல், ஆதி ஆகியோரின் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஏழை மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் கட்டும் விஜய்?