ETV Bharat / sitara

முருகனை இழிவுப்படுத்தியதாக நடிகர் யோகி பாபு மீது புகார்! - காக்டெய்ல்

சென்னை: இந்துக் கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் நடித்ததாக நடிகர் யோகி பாபு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

film
film
author img

By

Published : Feb 4, 2020, 10:41 PM IST

நடிகர் யோகி பாபு நடிப்பில், இயக்குநர் விஜய முருகன் இயக்கியுள்ள திரைப்படம் "காக்டெய்ல்". இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. அதில் யோகி பாபு முருகன் வேடத்தில் நிற்பது போலவும், அவருக்குப் பின்னால் ஆஸ்திரேலிய வகைக் கிளியான காக்டெய்ல் அமர்ந்திருப்பது போலவும் இருந்தது. இது இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாகக் கூறி, இந்து மக்கள் முன்னணி அமைப்பு சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் மயிலுக்கு பதிலாக கிளியைப் பதிவிட்டு கிண்டல் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றும், இதில் நடித்த நடிகர் யோகி பாபு மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், இந்து ஜனநாயக முன்னணியின் நிர்வாகி ஆனந்தன் என்பவரும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், " நடிகர் யோகி பாபு நடித்து வெளிவரவுள்ள காக்டெய்ல் திரைப்படத்தில், முருகன் வேடத்தில் யோகி பாபுவும், மயிலுக்கு பதிலாக கிளியையும் வைத்து, திரைப்படத்திற்கு காக்டெய்ல் எனவும் பெயர் வைத்திருப்பது தமிழ் கடவுளான முருகனை இழிவுபடுத்துவதாகும். எனவே, காமெடி நடிகர் யோகி பாபு மீதும், படத்தின் இயக்குநர் விஜய முருகன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் " எனக் கூறப்பட்டுள்ளது.

முருகனை இழிவுப்படுத்தியதாக நடிகர் யோகிபாபு மீது புகார்

இதையும் படிங்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு : ரஜினிகாந்தை நேரில் ஆஜராக ஆணையம் சம்மன்!

Intro:Body:இந்து கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் நடித்த யோகிபாபு மீது காவல் ஆணையரிடம் புகார்.

நடிகர் யோகிபாபுவை இந்து மக்கள் முன்னணி அமைப்பு நிறுவன அமைப்பாளர் நாராயணன் இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், "நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளிவர உள்ள "காக்டெய்ல்" திரைப்படத்தில் தமிழ் கடவுளான முருகனை இழிவுப்படுத்தும் நோக்கில் படத்தின் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். அதில் யோகி பாபு நடித்துள்ளார். போஸ்டரில் மயிலுக்கு பதிலாக கிளியை பதிவிட்டு கிண்டல் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இது முருக பக்தர்களையும் தமிழர்களையும் மனதை புண்படுத்தி உள்ளது. தமிழ் கடவுளை புண்படுத்தும் வகையில் நடித்துள்ள நடிகர் யோகிபாபு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் கூறியுள்ளனர்.

இதைப்போல இந்து ஜனநாயக முன்னணியின் சென்னை மாவட்ட தலைவர் ஆனந்தன் என்பவரும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், "காமெடி நடிகர் யோகிபாபு நடித்து வெளிவரவுள்ள காக்டெய்ல் தமிழ் திரைப்படத்தில், முருக கடவுள் வேடம் அணிந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

இதில் முருகர் வேடத்தில், யோகி பாபு மயிலுக்கு பதிலாக, கிளியை வைத்து இருப்பது மட்டுமல்ல, இந்த திரைப்படத்திற்கு காக்டெய்ல் என பெயர் வைத்திருப்பது, தமிழ் கடவுளான முருகர் கடவுளை இழிவு படுத்துவது போல் அமைக்கப்பட்டு உள்ளது.
காமெடி நடிகர் யோகிபாபு மீதும் படத்தை இயக்கிய இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.