'மேன் ஆஃப் ஸ்டீல்', 'பேட்மேன் வெர்சஸ் சூப்பர் மேன்', 'ஜஸ்டிஸ் லீக்' ஆகிய படங்களில் சூப்பர் மேனாக நடித்திருந்தவர் ஹென்றி கேவில். இதன் மூலம் இவர் சூப்பர் மேனாக உலகம் முழுவதும் மிக பிரபலமானர்.
தற்போது டிசி காமிக்ஸில் உருவாக இருக்கும், 'ஆக்வாமேன் 2', 'சூஸைட் ஸ்க்வாட்', 'தி பேட்மேன்' உள்ளிட்ட படங்களில் ஏதாவது ஒன்றில் ஹென்றி கேவில் சூப்பர் மேனாக சிறப்பு கெளவர தோற்றத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இயக்குநர் ஸாக் ஸ்னைடர் (Zack Snyder) 'ஜஸ்டிஸ் லீக்' (Justice League) பதிப்பு வெளியாகும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பையடுத்து இதில் நட்புக்காக நடித்து தர பல நடிகர் முன்வந்தனர். இருப்பினும் ஹென்றி கேவில் நடிப்பாரா என தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் தரப்பில் இருந்து எந்த விதமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
கடந்த வருடம் சூப்பர்மேன் கதாபாத்திரம் குறித்து ஹென்றி கேவில் கூறுகையில், "சூப்பர் மேன் உடை இன்னும் என்னிடம் தான் இருக்கிறது. அது இன்னும் என்னுடையது தான். அதை நான் இன்னும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கவில்லை. அந்த கதாபாத்திரத்திற்காக நான் இன்னும் நிறைய செய்யவேண்டியுள்ளது. கதாபாத்திரத்தின் ஆழத்துக்கு நான் செல்ல வேண்டும். காமிக்ஸில் இருப்பவற்றை பிரதிபலிக்க வேண்டும். அது எனக்கு முக்கியம். இன்னும் அந்த கதாபாத்திரத்துக்கு நான் நிறைய செய்ய வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: சூப்பர்மேன், ஸ்பைடர் மேன் தான் தனது கனவு பாத்திரம் - மனம் திறந்த டேனியல் கிரேக்!