மம்தா மோகன்தாஸ் இந்தியத் திரைப்பட நடிகையும், பின்னணிப் பாடகியும் ஆவார். இவர் தெலுங்கு, மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் கேரளாவில் அம்பாலபட் மோகன்தாஸ் - கங்கா தம்பதியினருக்கு 1984 நவம்பர் 14 அன்று பிறந்தார்.
2002 வரை பஹ்ரைனிலுள்ள இந்தியன் பள்ளியில் படித்த இவர், பெங்களூருவில் உள்ள மவுன்ட் கார்மல் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இதையடுத்து இவர் ஐபிஎம், கல்யாண் கேந்திரா, மைசூர் மகராஜா, ரேமண்ட்ஸ் நிறுவனங்களுக்காக விளம்பரங்களில் நடித்துள்ளார்.
மம்தா 2005ஆம் ஆண்டு வெளிவந்த 'மயோக்கம்' என்ற மலையாளப் படம் மூலம் மலையாளம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து 'பஸ் கண்டக்டர்', 'அட்புதம்', 'மதுசந்திரலேகா' போன்ற படங்களில் நடித்துள்ளார். பின்னர் 'சிவப்பதிகாரம்' என்ற படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். நடிப்பில் மட்டும் அல்லாமல் பாடல் பாடுவதிலும் இவர் சிறந்து விளங்கினார்.
மம்தா சர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி இசையைப் பயின்றவர். இவர் தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு முன்னதாகவே, பின்னணி பாடகியாக அறிமுகமானார். இவது பாடலுக்காக 2006ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான ஃபிலிம்ஃபேர் விருது கிடைத்தது. மேலும் இரண்டாவது துணை நடிகைக்கான கேரள மாநில அரசின் விருதினை 2010இல் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: ஏதேன் தோட்டத்தில் பூத்த பனிமலர் புகைப்படத் தொகுப்பு