சென்னை : பாலா சரவணன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கள்ளி காட்டு பள்ளிக்கூடம் என்ற தொடரின் மூலம் அறிமுகமாகினார்.
பின்பு அதே தொலைக்காட்சியின் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை என்ற தொடரில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
அதன் பிறகு ஈகோ, குட்டி புலி போன்ற திரைப்படங்கள் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவரின் ஏதார்தமான பேச்சு இவரை திரையுலகில் நன்றாக அடையாளபடித்தியது என்றே சொல்லலாம்.
இவர், பண்ணையாரும் பத்மினியும், பீடை, என்றென்றும் பாலா, நெருங்கி வா முத்தமிடாதே, சொக்கு, திருடன் போலீஸ், வணங்காமுடி, வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், இடம் பொருள் ஏவல், ஒரு நாள் கூத்து, நகர்வலம், கோ 2, புரூஸ் லீ போன்ற பல திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இன்று இவர் தனது 34ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : பவன் கல்யாணை வைத்து படம் இயக்கும் எண்ணம் இருந்தது - இயக்குநர் ராஜமெளலி