திரைப்பட இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகருமான அனிருத் ரவிச்சந்திரன் இன்று தனது 31ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இவருக்குத் திரைப் பிரபலங்கள், அவரது ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

இவர் இசையமைத்த முதல் திரைப்படம் 3. இந்தத் திரைப்படத்தின் ’வொய் திஸ் கொலவெறி டி’ என்ற பாடலின் மூலம் இவர் மிகவும் பிரபலமானார்.

3 படத்தினைத் தொடர்ந்து இவர் இசையில் வெளியான டேவிட் திரைப்படத்தின் ’கனவே கனவே’ பாடல் ரசிகர்களைக் கவர்ந்து பிரபலமாகியது.

இதனைத் தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படத்தின் பாடல்களும், பின்னனி இசையும் பிரபலமாகி இவரைத் தமிழ் முன்னணி இசையமைப்பாளர்களின் ஒருவராக மாற்றியுள்ளது.

இவரது இசைப் பயணத்தின் தொடக்கத்தில் தனுஷ் நடித்த, தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசையமைத்துவந்தார். தற்போது மற்ற படங்களுக்கும் இசையமைத்துவருகிறார்.
