ETV Bharat / sitara

கரோனாவில் இருந்து தப்பித்த ஹார்வி வென்ஸ்டீன் மீது புதிதாக பாலியல் வன்கொடுமை புகார் - கரோனாவில் இருந்து தப்பித்த ஹார்வி வென்ஸ்டீன்

கரோனா தொற்றில் இருந்து மீண்ட தயாரிப்பாளர் ஹார்வி வென்ஸ்டீன் மீது தற்போது புதிதாக பாலியல் வன்கொடுமை புகார் சுமத்தப்பட்டுள்ளது.

Harvey Weinstein
Harvey Weinstein
author img

By

Published : Apr 15, 2020, 9:43 AM IST

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரான ஹார்வி வெய்ன்ஸ்டீன் இதுவரை 200 படங்களைத் தயாரித்துள்ளார். இவர், தன்னிடம் வாய்ப்பு கேட்டுவரும் நடிகைகளை பாலியல் ரீதியாக அணுகியதாக, ஏஞ்சலினா ஜோலி புகார் அளித்தார்.

அவருடன் இணைந்து 80க்கும் மேற்பட்ட மாடல் அழகிகளும், பாலியல் புகார் அளித்தனர். அப்புகாரின் அடிப்படையில் ஹார்வி வெய்ன்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அண்மையில் அவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து, ரிக்கர்ஸ் தீவு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சிறையில் உள்ள இவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து சிறை அலுவலர்கள் அவரை தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் தங்கவைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது கரோனாவில் இருந்து மீண்டுள்ளார். அவரை மீண்டும் சிறைக்கு அனுப்ப முடிவுசெய்யதுள்ளனர்.

இதனையடுத்து ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது புதியதாக பாலியல் வன்கொடுமை புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி விடுதி ஒன்றில் பாலியல் எண்ணத்துடன் பெண் ஒருவரை அணுகியுள்ளதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு மேலும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் வழக்குரைஞர்கள் எட்டு குற்றாச்சாட்டு புகார்களை மறு ஆய்வு செய்து அதில் மூன்றை முன்வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற பிரபல தயாரிப்பாளர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.